காசாப்பகுதி சிறார்களின் வாழ்க்கை கதை சொல்லும் ஆவணப்படம் | Veritas Tamil

மத்திய கிழக்கில் நிகழும் நெருக்கடி நிறைந்த சூழல் மற்றும் உலகெங்கிலும் மோதல்கள் மற்றும் வன்முறைச் சூழல்களில் வாழும் குழந்தைகளின் பார்வையில் எதிர்நோக்கு மற்றும் உடன்பிறந்த உணர்வின் போர் சூழலிலான பாலஸ்தீன - இஸ்ரேல் சிறுவர்களின் நட்பை மையமாகக் கொண்டு உருவான காசா பகுதி சிறார் - விடுதலை அலைகளின் மேல் என்ற கருப்பொருளில் ("The Children of Gaza - On the Waves of Freedom (How Kids Roll)",  How Kids Roll என்னும் ஆவணத் திரைப்படமானது வத்திக்கான் நூலக திரையரங்கில் வெளியிடப்பட்டது.

எங்களுக்கும் கனவுகள் உள்ளன. எதிர்நோக்கு உள்ளது கிளர்ச்சியாளர்களை விட மேலானவர்களாகவும், எளிமையான இலக்குகளை விட அதிகமானவர்களாகவும் நாங்கள் இருக்கின்றோம் என்று அத்திரைப்படத்தில் நடித்த இளம்பெண் ஒருவர் எடுத்துரைத்தக் கருத்துக்கள் காசா சிறார்களின் இருப்பை அதிகமாக வலியுறுத்துவதாகவும், உயர்நிலையில் இருப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுப்பதாகவும் அமைந்திருந்தன.

இயக்குநர் Loris Lai இயக்கிய 2024-ஆம் ஆண்டின் How Kids Roll (மூலத் தலைப்பு | Bambin: di Gaza) திரைப்படம், பாலஸ்தீனச் சிறுவன் ஒருவரும், இஸ்ரேல் சிறுவன் ஒருவரும். காசா பகுதியில் உருவாக்கும் எதிர்பாராத நட்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆவணப்படத்திற்கு. திரைக்கதை Loris Lai மற்றும் Dahlia Heyman இணைந்து எழுதியுள்ளனர். போர் சூழலில் வாழும் குழந்தைகள், அலைச்சறுக்கு (surfing) விளையாட்டு மூலம் ஒன்றினைந்து, நட்பு, கருணை, மனிதாபிமானம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றனர். இயக்குநர் Loris Lat, "இந்தப் படம் குழந்தைகளின் பார்வையில் போர் மற்றும் அமைதியைப் பிரதிபலிக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களின் தொடர் தாக்குதல்கள், வன்முறைச் சுழல், குண்டுகள் விழும் அபாயத்தை அறிவிக்கும் ஒலிப்பான்கள் என அவர்களது குழந்தைப்பருவ வாழ்க்கை இடைநிறுத்தம் செய்யப்படுவதை சுட்டிக்காட்டும் வண்ணம் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

படத்தைப் பார்த்த விமர்சகர்கள், 'இது ஒரு சாதாரண போர் சூழலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் அல்ல, மனித உறவுகளின் அழகை எடுத்துரைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. எனவும், உணர்வுப்பூர்வமாக நெகிழச்செய்கிறது" எனவும் பாராட்டி இருந்தனர். இந்நிலையில்தான் இந்த ஆவணப்படம், வத்திக்கான் நூலகத்தில் வெளியிடப்பட்டது. உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் போர் குழலால் மக்கள் அவதிப்படும் நிலையில், இதனால் குழந்தைகளின் கனவு, எதிர்காலம், மனநிலை எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகிறது? இருப்பினும் அந்த அடிப்படை மனித உணர்வு அவர்களை எப்படி அன்பின் வடிவில் இணைக்கிறது என்பதை அனைவரும் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் இன்றைய சூழலில் மிகவும் அவசியமானதாகும்.