குருத்துவ அருட்பொழிவின் பொன் விழாக் கொண்டாட்டம். | Veritas Tamil

குருத்துவ அருட்பொழிவின் பொன் விழாக் கொண்டாட்டம். 


கொழும்பு பேராயர் கர்தினால் ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் படபெண்டிகே டான் அவர்களின் குருத்துவப் அருட்பொழிவின் பொன் விழாவை சிறப்பிக்கும் வகையில், ஜூலை 7, 2025 அன்று கொழும்பு பேராயர் மாளிகையின் மதுரு கலையரங்கத்தில் நடைபெற்ற ஒரு பொதுச் சமூக நிகழ்வில்  இலங்கை ஜனாதிபதி அனுர குமார டிஸநாயக்கே,  கலந்து கொண்டார். இது ஒரு மத மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இருந்தது. 

தமது உரையின் போது ஜனாதிபதி டிஸநாயக்கே, கர்தினால் ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் இலங்கை மற்றும் உலகளாவிய கத்தோலிக்க திருஅவைக்கு அர்ப்பண உணர்வோடு அவர் ஆற்றிய முக்கியமான பல பணிகளுக்காக  வாழ்த்தி, நன்றி தெரிவித்தார்.  கத்தோலிக்க திருஅவையில் கர்தினால் அவர்கள் முக்கியமான பொறுப்பில் இருப்பதையும் பாராட்டினார்.

ஜனாதிபதி  தனது உரையில், நாட்டின் உயர்மட்ட கத்தோலிக்க மதத் தலைவராக இலங்கைக்கும் உலகளாவிய திருச்சபைக்கும் பல சிறப்பான பணிகளை அர்ப்பணிப்புடன்  செய்ததற்காக கர்தினாலைப் பாராட்டி நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதிபேசுகையில், கர்தினால் அவர்கள் எவ்வாறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளுக்கு அறநெறி மற்றும் இறைவாக்கினருக்கு உரித்தான தன்மையுடனும் துணிச்சலுடனும்  குரல் கொடுத்தார் என்பதை பாராட்டினார்.  மேலும்" கர்தினால் ரஞ்சித் எப்போதும் ஏழைகளின் நலன்களுக்காகப் போராடி, அவர்களின் உரிமைகளை பாதுகாத்து, நீதிக்காக போராடுவதோடு, அந்த தீவுக் நாட்டில் அமைதியை ஊக்குவிக்கும் பணியில் இடைவிடாமல் ஈடுபட்டு வருகிறார்,” என கூறினார்.


"கர்தினால் தொடர்ந்து ஏழைகளின் நலன்களைப் பாதுகாத்து, அவர்களின் உரிமைக்காய் குரல் கொடுத்து, தீவு முழுவதும் அமைதியை ஊக்குவிக்கும் அதே வேளையில் நீதிக்காகப் பாடுபட்டுள்ளார்" என்று கூறினார்.
இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவரான ஆயர் ஹரோல்ட் அந்தோணி, திருஅவைக்கும் சமூகத்திற்கும் அவர் ஆற்றிய சிறந்த சேவைக்காக கர்தினாலைப் பாராட்டினார்.

தனது உரையில், கர்தினால்  ரஞ்சித் அவர்கள் ஜனாதிபதி, அரசாங்க அதிகாரிகள், திருஅவைத்தலைவர்கள் மற்றும் பல ஆண்டுகளாக கத்தோலிக்க திருஅவையுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். யாரும் பின்தங்கியிருக்காத அமைதியான, வளமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இலங்கைக்காக அனைத்து குடிமக்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.


கர்தினால் ரஞ்சித் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி, சிலாப மறைமாவட்டத்தில் உள்ள பொல்கஹவேலாவில் பிறந்தார்.  1975 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி, உரோமில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் திருத்தந்தை பவுல் VI அவர்களால் குருவாக நியமிக்கப்பட்டார்.
இலங்கைக்குத் திரும்பியதும், 1978 ஆம் ஆண்டு பமுனுகமவில் உதவிப் பங்குதந்தையாக நியமிக்கப்பட்டார். பின்னர் பயாகலை மற்றும் களுத்துறையில் பங்கு தந்தையாக பணியாற்றினார்.


தனது நீண்ட பணிவாழ்வால், கொழும்பில் துணை ஆயராகவும், மற்றும் இரத்தினபுரியில் ஆயராகவும், மக்களின் மறைபரப்பு பணிக்கான சபையின் துணைச் செயலராகவும், இந்தியோனேசியா மற்றும் திமோர்-லெஸ்டேக்கு திருத்தந்தையின் அப்போஸ்தலிக்க தூதராகவும், திரு வழிபாடு மற்றும் திருஅவை சடங்குகளின் ஒழுக்கத்திற்கான சபையின் செயலராகவும்,  மற்றும் கொழும்பு பேராயர் உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்துள்ளார்.


இவர் 34 ஆண்டுகள் ஆயராகவும், 14 ஆண்டுகள் கர்தினாலாகவும் இருந்து வருகிறார். இலங்கையிலும் அதற்கு அப்பாலும் உள்ள பங்குதலங்களில் சிறந்த அருட்தந்தையாக  வலுவான தலைமைத்துவத்தை தொடர்ந்து வழங்கி வருகிறார்.