போராட்டம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 26.02.2025

போராட்டம் என்பது மனித குலத்திற்கு மட்டுமே உள்ளதா?
நிச்சயமாக இல்லை
நன்றாக யோசித்துப் பார்த்தால்
ஒரு செல்
அமைப்பாக இருந்தது.
கைகள் கால்கள் இல்லாத போதும்
தன்னுடைய
உடலை ஒரு ஊனப்பட்டவனுடய
உடல் மாதிரி
தன்னுடைய
ஒரு செல்லை
பல கால்களாக
மாற்றி மாற்றி
போராடிய அமீபா
இருந்துதான் இவ்வளவு பெரிய பரிணாம வளர்ச்சியில் நாம் வந்திருக்கிறோம்
ஒரு கம்பளி பூச்சியின் உடைய வாழ்க்கையை பார்த்தோம் என்றால் கூட
ஒரு முட்டையிலிருந்து அழகான வண்ணத்துப்
பூச்சியாக மாறுவதற்கு எவ்வளவு அற்புதமான திட்டங்களை போட்டுக் கொண்டிருக்கிறது
இது யார் வகுத்தது
பரிணாம வளர்ச்சியா மரபணுக்களா எத்தனையோ வாதங்கள் இருந்தாலும்.
அதற்குப் பின்னால் உள்ள முனைப்பும் ஆர்வமும் உழைப்பும்தான் நமக்கு இன்ஸ்பயரிங்க் இன்ஸ்பிரேஷன் ஆக ஊக்கமூட்டுவதாக அமைகிறது
எவ்வளவு வாதங்கள்
மனிதன் பிறப்பதற்கு முன்பு
காரணத்தோடு பிறக்கிறான்
பிறந்ததுக்கு பிறகு காரணத்தை கண்டுபிடிக்கிறான்
இந்த ஆயிரக்கணக்கான வாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும்
இதைப் பற்றி எல்லாம் நாம் கவலைப்படுவதற்கு இல்லை
ஒவ்வொரு உயிரினுடைய வாழ்க்கை வரலாறும் நமக்கு உற்சாகத்தையும் ஆனந்தத்தையும் துணிவையும் நம்பிக்கையுமே கண்களை திறந்து காதுகளை திறந்து உணர்வுகளை திறந்து
விடுகிறது
நாம் இயற்கையிடம் கற்றுக் கொள்ள வேண்டியது எத்தனையோ அற்புதமான பாடங்கள்
கல்விச்சாலைகளிலும் புத்தகசாலைகளிலும் ஊடகங்களிலும் அடுக்கி வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்களை விட
கண்ணுக்கு முன்னே காணுகின்ற ஒவ்வொரு உயிரும் நமக்கு அற்புதமான பாடங்களை
சொல்லித் தருகிறது
நாம் தான்
கற்றுக்கொள்ள வேண்டும்
இன்று நாங்கள் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து எம் மக்களுக்கு ஊக்கமும் உழைப்பும் விடாமுயற்சியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே.
மரியே வாழ்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
