வெற்றிப்படி ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 28.06.2024

வலி வேதனை ஏமாற்றம் எல்லாம்
வாழ்க்கையின் இறுதிக்கட்டமல்ல.

வாழ்க்கையைப் புரிந்துக் கொண்டு
பயணிப்பதற்கான முயற்சிக் கட்டம்.

தயங்குபவர்களுக்கும் பயப்படுபவர்களுக்கும் யோசிப்பவர்களுக்கும், 
இந்த உலகில் எதுவும் சாத்தியமில்லை.

உங்களுடைய துணிவும் முயற்சியும் தான் வெற்றியின் முதற்படிகள்.

எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று 
எதிர்பாராமல் கிடைக்காது போகும்பொழுது உடல் , உளவியல் ரீதியாக  ஒரு தாக்கம் ஏற்படும் என்பது யதார்த்தமான உண்மை.

ஆனால் இந்தப் பின்னடைவை வெற்றியின் முதற்படியாக எண்ணிக் கொண்டு உங்களுடைய நகர்வுகளை நிதானமாக நகர்த்த வேண்டும்.

அதை விடுத்து எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றவுடன் துவண்டு போய் மனவிரக்தியில் நமது முயற்சிகளை கைவிடக்கூடாது.

விடாமுயற்சி என்பது முடிந்தவரை முயல்வது இல்லை!.
அது கிடைக்கும் வரை முயல்வதே விடாமுயற்சியாகும்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து ஏழை எளியோருக்கு மட்டும் எல்லா நன்மைகளும் நம்பிக்கையும் நிம்மதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே.

மரியே வாழ்க
 
  
சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி