பெண் - அதிசயம் || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 12.062024

ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு செல்ல பாதை வேண்டும்
அந்த பாதையின் நடுவே நீரின் ஓடம் ஓடினால் அந்த மறு முனைக்கு செல்ல பாலம் வேண்டும் அல்லவா?
அதுபோல!
பெண் என்பவள் பிறந்த இடத்திலிருந்து புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க திருமணம் என்ற பாலம் வேண்டும்
புகுந்த வீட்டு பாலத்தை கடந்து வந்து
புதிய உறவுகளோடு பயணத்தை தொடர்ந்து
அனைத்து சுற்றங்களோடும் அன்பு பாராட்டி
உறவுகளை இணைக்கும் நூலிழையாக இயங்கும் அற்புத சக்தியே பெண்
பெண்ணால் எதையும் துறக்கவும் முடியும்
கடக்கவும் முடியும்
இணைக்கவும் முடியும்
ஈடுபடுத்தவும் முடியும்
பெண்னாக பிறந்து விட்ட பிற்போக்கு சிந்தனை இல்லாமல்
பெண் என்ற பெருமையை உணர்ந்து
கடமையை செய்ய உருவெடுத்த உன்னத பிறப்பு என்ற
முற்போக்கு சிந்தனையோடு தொடர்வோம் நம் பயணத்தை
வாழ்க வளர்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program

- Reply
Permalink