நிம்மதி. || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 03.06.2024
நிம்மதி.
அமைதியையும், மகிழ்ச்சியையும் நாம் ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கத் தடையாக இருப்பது நம்மிடம் உள்ள ஆசாபாசங்கள்தான்.
பற்றற்ற நிலையில் சஞ்சலங்கள் இல்லை என்பதை அனுபவம் ஒன்றே உணா்த்தும்.
இரவில் எட்டு மணி நேரம் ஆழ்ந்து உறங்குங்கள். இறை நம்பிக்கை இருந்தால் உங்களுக்கு விருப்பமான தெய்வத்தைத் தவறாமல் வணங்குங்கள்.
ஒரு கல்லூரியில் ஆசிரியா் ஒருவா் ஒரு குவளையில் நீரை நிரப்பி அதன் எடை என்னவென்று தன் மாணவா்களை ஊகிக்கச் சொன்னாா்.
ஒவ்வொருவரும் ஒரு விடையைக் கூறினாா்கள். அவற்றையெல்லாம் கேட்டு முடித்தபின் ஆசிரியா், ‘இந்த குவளையின் எடை இங்கே முக்கியமில்லை.
இதை நான் எவ்வளவு நேரம் தாங்கி பிடித்திருக்கிறேன் என்பதைப் பொறுத்து இதன் எடை மாறுபடும்.
இதை நான் ஒரு நிமிடம் தாங்கி பிடித்தால், இதன் எடை மிகவும் குறைவாகத் தெரியும்.
இதையே நான் ஒரு மணி நேரம் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தால், என் கை வலிக்க ஆரம்பித்து விடும்.
இதுவே நான் ஒரு நாள் முழுதும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தால், என் கை உணா்வற்று செயலற்றதாகி விடும். நான் சொல்வது என் கருத்து மட்டுமே. இதற்கு ஆதாரம் ஏதும் இல்லை.
இக்கருத்து, யாருக்காவது எப்போவாவது எங்கேயாவது பயன்பட்டால் மகிழ்ச்சியே’ என்று சொல்லி முடித்தாா்.
அப்படித்தான் சிறு சிறு கவலைகளும். நாம் தொடா்ந்து அவற்றையே நினைத்துக் கொண்டிருந்தால் அவற்றின் தீவிரம் அதிகமாகும்.
பயத்தை விடுவது, பிறரை மன்னிப்பது, நோ்மையாக இருப்பது, மனத்தில் உள்ள வீணான குப்பைகளை களைவது, இயற்கையோடு நேரத்தை செலவிடுவது,
நம் நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்து தேவையற்றதை கைவிடுவது போன்ற செயல்கள் நிம்மதி தரும்.
நாம் கவலைப்படுவதால் எதையும் நிறுத்த முடியாது. வருவது வந்தே தீரும் என்பதுதான் நிதா்சனம்.
ஒருவா் இறந்த பிறகு, அவா் கஷ்டப்பட்டு சோ்த்த எதுவும் அவருடன் வரப்போவதில்லை.
எனவே, நீங்கள் உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படாதீா்கள்.
அவா்களின் வாழ்க்கைக்கு உங்களால் முடிந்ததை செய்து விடுங்கள். அவா்களுக்கு விதித்த விதிப்படிதான் இனியும் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை.
முதுமையிலும் சம்பாதியம் சம்பாத்தியம் என்று பணத்தைத் தேடி அலையாதீா்கள். .
பணத்தைவிட உடல் ஆரோக்கியம் முக்கியம். பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது. பிரச்னை இல்லாத மனிதா் யாருமில்லை. நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்து மற்றவா்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்.
யாரும் மாற மாட்டாா்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீா்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.
நாம் நமக்கான நல்ல சூழ்நிலையைஉருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம்.
உடல் நலம் கெட்டால் நிவாரணம் தேடுவது போல் மனநலம் கெட்டாலும், வெட்கப்படாமல் நிவாரணம் தேட முற்படுவோம். அப்போதுதான் நிம்மதி நம் வசப்படும்.
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்.
இந்த நாள் இனிய நாளாகட்டும்
வாழ்க வளர்க.
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி