‘நம்பிக்கையின் திருப்பயணிகள் மாநாட்டின்’தொடக்க விழா முன்னேற்பாடுகள் தொடங்கியது. | Veritas Tamil
‘நம்பிக்கையின் திருப்பயணிகள்
மாநாட்டின்’தொடக்க விழா முன்னேற்பாடுகள்
தொடங்கியது.
ஆசியாவில் உள்ள ஆயர்கள், குருக்கள், துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் 'எதிர்நோக்கின் திருப்பயணிகளாக' மலேசியாவில் உள்ள பினாங்கில் இணைத்துள்ளார்.இந்த மாநாட்டில் திருஅவையின் எதிர்காலத்தை பகுத்தறிந்து, கொண்டாடி, வடிவமைத்து புதுப்பிப்பதற்காக ஒன்று கூடுகின்றனர்.மலேசிய தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்துக் ஆரோன் அகூ டகாங் அவர்கள், நவம்பர் 27, 2025 அன்று பெனாங்கில் நடைபெறும் தொடக்க விழாவில் தலைமை உரையை வழங்க உள்ளார்.
மலேசியாவின் வண்ணமயமான நகரமான பெனாங், நவம்பர் 27 முதல் 30, 2025 வரை ஆசியாவின் கத்தோலிக்க தலைவர்களை ஒருங்கிணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க “நம்பிக்கையின் திருப்பயணிகள் ” என்ற நிகழ்வை நடத்துவதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆயர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மற்றும் கத்தோலிக்க பொதுமக்கள் ஆகியோரைக் கொண்டு, ஆசிய திருஅவைக்கு நம்பிக்கையூட்டும் பாதையை உரையாடல், பகிர்வு மற்றும் கொண்டாட்டத்தின் வழியாக வடிவமைப்பதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.
மலேசிய தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் மாண்புமிகு டத்துக் ஆரோன் அகூ டகாங், நவம்பர் 27 அன்று நடைபெறும் தொடக்க விழாவில் கலந்து கொண்டு தலைமை உரையை வழங்க உள்ளார்.
இந்த பயணம் , “ஆசிய மக்களாகிய நாம் ஒன்றாகப் பயணிப்போம்” என்ற தலைப்பை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. ஆசியாவின் செறிந்த பண்பாட்டு பல்வகைத்தன்மையையும், திருச்சபை ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் இது முன்னிறுத்துகிறது.
இந்த நிகழ்வை FABC நற்செய்தி பிரிவு மற்றும் பெனாங் மறைமாவட்டம் இணைந்து நடத்துகின்றன. மேலும் பாண்டிபிகல் மிஷன் சொசைட்டிஸ் – ஆசியா மற்றும் மலேசியா, சிங்கப்பூர், புருனை ஆயர் பேரவைகள் ஆகியவை இணைந்து ஒத்துழைக்கின்றன.
இந்த திருப்பயணம் 23 நாடுகளிலிருந்து 773 பேர் பங்கேற்கின்றனர். இதில் இந்தியா – 122, பிலிப்பைன்ஸ் – 128, மலேசியா – 144, தாய்லாந்து – 34, வியட்நாம் – 30 மற்றும் பலர் அடங்குவர்.
கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டாக்லே – நற்செய்தி ஆணையத்தின் இணைத் தலைமை கார்டினல் பாப்லோ வெர்ஜிலியோ டேவிட் – பிலிப்பைன்ஸ்,பேராயர் சைமன் போ – குச்சிங், மலேசியா கார்டினல் டத்தோ’ ஸ்ரீ செபாஸ்டியன் பிரான்சிஸ் – பெனாங் மறைமாவட்டம் பேராயர் ஜார்ஜ் பல்லிப்பரம்பில் SDB – FABC நற்செய்தி பிரிவு தலைவர்
சினோடல் (இணைந்து பயணிக்கும்) முறையைப் பின்பற்றும் இந்த திருப்பயணிகள் , பகிர்வு, உரையாடல் என பல நிகழ்வுகளை உள்ளடக்கியது. இளம் துறை, சமாதானம் மற்றும் நல்லிணக்கம், மதநல்லிணக்கம், பொதுவான இல்லமான பூமி பாதுகாப்பு போன்ற தலைப்புகளில் முக்கிய உரைகள் மற்றும் தாக்கம் ஏற்படுத்தும் அமர்வுகள் நடைபெறும்.
திருப்பயணத்தின் போது, தென் கிழக்காசியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஆலயங்களில் ஒன்றான சின்ன பசிலிக்கா ஆப் செயின்ட் ஆன் மையமாக கொண்டு பொதுமக்களுக்கான திருப்பலி நடைபெறும். இந்த திருப்பலியை கார்டினல் லூயிஸ் அண்டோனியோ டாக்லே நடத்துகிறார்.திருப்பலிக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிறிஸ்தவ பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர் மற்றும் ICON Ministry நிறுவனரான பிதா ராப் கலியா வழங்கும் சிறப்பு கச்சேரி நடைபெறும்.
மேலும், ஆசிய பண்பாட்டு செழுமையை முன்னிறுத்தும் ரெக்ஸ்பேண்ட் வழங்கும் இசை நிகழ்ச்சிகளும் இந்த விழாவை சிறப்பிக்கும்.மேலும் , நம்பிக்கையின் திருப்பயணிகள் மாநாட்டில் ஊடகக் கூட்டாண்மையாளராக ரேடியோ வேரித்தாஸ் ஆசியா (Radio Veritas Asia) செயல்படுகிறது.
நிகழ்வின் நேரடி புதுப்பிப்புகள், முக்கிய செய்திகள், சிறப்பு பதிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் Facebook, Instagram, YouTube, X, ஆகிய சமூக ஊடகங்களில் Radio Veritas Asia (@VeritasAsia) மூலம், அல்லது எங்கள் இணையதளம் https://tamil.rvasia.org வழியாகப் பார்வையாளர்கள் தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.