அருளாளராக அறிவிக்கப்பட்ட அன்னை எலிஸ்வா | Veritas Tamil
கொச்சி வல்லார்பாடம் தேசிய பேராலயத்தில், திருத்தலப் அன்னை பட்டம் எலிஸ்வா அவர்களுக்கு "அருளாளர்" அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியத் திரு அவை வரலாற்றில் இது ஒரு முக்கியத் தருணமாகப் பார்க்கப்படுகிறது.
வெராப்போலி உயர்மறைமாவட்டப் பேராயர் மேதகு ஜோசப் கலத்திப்பரம்பில் முன்வைத்த கோரிக்கையை ஏற்று. மலேசியாவின் பெனாங்க் மறைமாவட்ட ஆயரும் திருத்தந்தை லியோவின் சிறப்புப் பிரதிநிதியுமான கர்தினால் செபாஸ்டியன் பிரான்சிஸ் அவர்கள், அன்னை எலிஸ்வாவை "அருளாளர்" அறிவித்தார். மகளிரின் வாழ்க்கை நிலைகளோடு எலிஸ்வாவின் வாழ்வும் நெருங்கிய தொடர்புடையது என அவர் உரையாற்றியுள்ளார்.
மகளாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும், தாயாகவும். பெற்றோரின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து, எலிஸ்வா வத்தாரு வகாயில் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களின் ஒரே குழந்தையான அன்னா பிறந்த சில காலத்திலேயே அவர் திடீரென மரணமடைந்தார். இந்த தனிப்பட்ட அனுபவங்கள் மூலம், அன்னை எலிஸ்வா ஒவ்வொரு மனைவியுடனும், கர்ப்பிணியுடனும், தாயார்களுடனும், கணவனை இழந்த கைம்பொண்களுடனும் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் தன்னை இறைவனின் திருவுளத்திற்கு ஒப்படைத்ததால், கிறிஸ்துவின் மணவாட்டியாகவும் பலரின் ஆன்மீகத் தாயாகவும் இறைவன் அவரை மாற்றி வடிவமைத்தார். கணவர் மரணத்திற்குப் பின் எலிஸ்வா, தனது சகோதரி திரேசியா, மகள் அன்னாவுடன் சேர்ந்து, TOCD (Third Order of Carmelite Discalced) குழுவையும், இன்று CTC என அழைக்கப்படும் தெரேசியன் கார்மேல் சபையையும் தொடங்கினர். இது கேரளாவின் முதல் துறவற சபையாகும். இந்தியத் திருச்சபையின் முன்னோடியாகவும் திகழ்கிறது என்று கர்தினால் மேலும் குறிப்பிட்டார்.
அன்னை எலிஸ்வா அவர்களை அருளாளர் நிலைக்கு உயர்த்தக் காரணமான அதிசயத்தைப்பற்றி அவர் பின்வருமாறு கூறினார்: “கருவில் நிகழ்ந்த அதிசயத்தைக் குறித்து நாம் அனைவரும் அறிந்தவர்களே.” 2005-ஆம் ஆண்டு கேரளா எர்ணாகுளத்தில், 34 வார கர்ப்பத்தில் உதட்டுப் பிளவு (cleft lip - கருவின் வளர்ச்சியின் போது மேல் உதட்டின் முழுமையற்ற இணைப்பு காரணமாக ஏற்படும் பிறப்பு குறைபாடாகும்) குறைபாடு கண்டறியப்பட்ட ஒரு பெண் குழந்தை அன்னை எலிஸ்வாவின் பரிந்துரையின் மூலம் கருவிலேயே அற்புதமாக குணமடைந்ததாக கூறப்பட்டது. இந்த அதிசயத்தை வத்திக்கான் அங்கீகரித்து, அவரை அருளாளராக அங்கீகரித்துள்ளது.
இப்போது அன்னை எலிஸ்வா புனிதராக அறிவிக்கப்படுவதற்கு ஒரு படி அருகில் உள்ளார்,” என கர்தினால் பிரான்சிஸ் மேலும் கூறினார். “இந்த முதல் அதிசயத்திற்காக இறைவனைப் புகழ்ந்து நன்றி கூறியதுடன், இரண்டாவது அதிசயம் நிகழுமாறும் வேண்டுகிறேன். அருளாளராக அறிவிக்கப்படுவதிலிருந்து, இறைவன் விரும்பும் நேரத்தில் புனிதராக உயர்த்தப்படுவாரென நம்புகிறோம்; ஏராளமான இதயங்கள் அவரது புனிதமான, தைரியமான, அசைக்கமுடியாத நம்பிக்கை மற்றும் அன்பின் வாழ்க்கையால் தொடர்ந்து ஊக்கமடைந்து வருகின்றன.
விழாவின் போது, வெராப்போலி உயர் மறைமாவட்டத்தின் பேராயர் ஜோசப் கலத்திப்பரம்பில், அருளாளராக அங்கீகரிக்கப்படுவதற்கான உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைத்தார். கர்தினால் பிரான்சிஸ் அறிவிப்பு செய்தபோது, ஆலயம் முழுவதும் மணி ஒலிகள் முழங்கின.இந்திய நாட்டின் தூதராகிய பேராயர் லியோபால்டோ ஜிரெல்லி அவர்கள் ஒரு செய்தியை அனுப்பியிருந்தார்; கர்தினால் ஒஸ்வால்ட் கிராசியாஸ் அவர்கள் அருளாளர் எலிஸ்வாவின் புனித உருவப்படத்தை வெளியிட்டார். அவரது புனித பாகங்கள் ஆலயத்தில் மரியாதையுடன் நிறுவப்பட்டன.
திருப்பலியின் பின்பு, CBCI தலைவரான பேராயர் மார் அன்ட்ரூஸ் தாழாத், அன்னை எலிஸ்வாவை நோக்கிய செபத்தை வெளியிட்டார். KRLCBC தலைவரான பேராயர் வர்கீஸ் சக்களக்கல் நினைவுப் புத்தகத்தை வெளியிட்டார்; அதே நேரம், பேராயர் டாக்டர் ஜோசப் கலத்திப்பரம்பில் 'Coffee table book' என அழைக்கப்படுகிற பல வண்ணங்களால் அச்சடிக்கப்பட்ட வண்ண ஓவிய புத்தகத்தின் முதல் பிரதியை சகோ.ஷஹீலா CTC-க்கு வழங்கினார். விழா, அருளாளர் அன்னை எலிஸ்வாவின் புனித உருவத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற மரியாதையான ஊர்வலத்துடன் ஏராளமான அருள்சகோதரிகள் கலந்துகொண்டு அன்னை எலிஸ்வாவை வணங்கினர்.