உன்னோடு நான் இருப்பேன்
நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன். ஏனெனில், நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னைக் கைவிடமாட்டேன்” என்றார்.⒫
தொடக்க நூல் 28-15
யாக்கோபு தன் தந்தை வீட்டிலிருந்து தன் தாய் மாமன் லாபான் வீட்டுக்கு செல்கிறார் . செல்லும் வழியில் சோர்வினால் படுத்து உறங்கினார். அப்போது கடவுள் அவனது கனவில் தோன்றி நான் உன்னோடு இருப்பேன் உனக்கு காவலாய் இருந்து உன்னை வழி நடத்தி மீண்டும் உன் நாட்டுக்கு திரும்பி வர செய்வேன் என்று அவர் சொன்னார். அதன்படி அந்நாளில் இருந்து அவன் தன் சொந்த ஊருக்குத் திரும்பும் வரை அவர் அவனோடு இருந்து அவனுக்கு துணையாய் இருந்து அவனுடைய தொழிலையும் குடும்பத்தையும் ஆசீர்வதித்தார். அவர் ஆசீர்வதிக்கும் கடவுள். துணையிருந்து எல்லாவற்றையும் நடத்துகின்ற கடவுள் .
அது போல் நம்மையும் ஒவ்வொரு நாளும் பாதுகாத்து நமக்கு துணையாய் இருப்பார். நம்மை வழிநடத்துவார். ஆசீர்வதிப்பார். நம்முடைய செயல்பாடுகளில் வெற்றியை தருவார். பயப்பட வேண்டாம். அஞ்சாதே. கலங்காதே .உன்னோடு நான் இருக்கிறேன் என்று சொல்கிறார்.
ஆண்டவரே , அபிரகாம் ஈசாக், யாக்கோபு இவர்களோடு இருந்த இறைவனே உம்மை போற்றுகின்றோம் . இந்த நாளில் எங்களோடு இருந்து, நாங்கள் எடுக்கும் முயற்சிகளை ஆசீர்வதித்து , துணைநின்று எங்களைப் பாதுகாத்தருளும் . தீமைக்கு விலக்கி நன்மையால் நிரப்பும் . நலம் தரும் உணவான உம் உடலை மீண்டும் நாங்கள் பெற்று மகிழ எங்களுக்கு அருள்தாரும் . ஆமென்.
Daily Program
