உலக ஆஸ்துமா தினம் | May 3
ஆஸ்துமா நோய் விழிப்புணர்வு நாள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதலாவது செவ்வாய்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. ஆஸ்துமா என்பது கிரேக்க வார்த்தையாகும். இந்த நோயை இரண்டாம் நூற்றாண்டில் அரேசியஸ் என்ற மருத்துவர் கண்டுபிடித்தார். இதன் பொருள் மூச்சுவிடுவதற்கு சிரமம் என்பதாகும். மூச்சிறைப்பு நோய் என்று வர்ணிக்கப்படும் ஆஸ்துமா மிகுந்த சிரமத்தை தரக்கூடியது. குளிர்காலங்களில் இந்த நோயின் தாக்கம் இரட்டிப்பாகும். மூச்சுக்குழல் பாதையில் உள்ள மூச்சுக் குழாய்கள் சுருங்கி சுவாசிப்பதற்கு சிரம்படுவதே ஆஸ்துமா. பல்வேறு காரணிகளால் இந்நோய் ஏற்பட்டாலும் பெரும்பான்மையாக கூறப்படும் காரணம் அலர்ஜிதான்.
உலக அளவில் 10 கோடி பேர் ஆஸ்துமா நோய் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளையும் ஆஸ்துமா நோய் அதிக அளவில் தாக்குகிறது. இந்தியாவில் 10 சதவீத குழந்தைகள் ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டுள்ளனர். 51 சதவீத மக்கள் இந்த பிரச்சனையால் வேதனையை அனுபவித்து வருகின்றனர்.
மூச்சுவிடுவதில் சிரமம் உடலுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவுப் பொருட்கள், தூய்மையற்ற காற்று, புகை போன்றவை உள்ளே செல்வதால் திசுக்களில் இருந்து புரோகைடின், கைமின் போன்ற பொருட்கள் வெளிப்பட்டு மூச்சுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துக்கின்றன. மூச்சுக்குழாயில் ஏற்படும் அடைப்பு காரணமாக மூச்சு விடுவதில் மனிதர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. அலர்ஜியை தவிருங்கள் இந்த நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களை தவிர்த்தல் வேண்டும். தூய்மையான காற்றை சுவாசித்தல், நீரை காய்ச்சி குடிக்க வேண்டும், பருத்தி ஆடைகளை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். படுக்கை அறை சுத்தம் படுக்கை அறை தலையணைகளில், போர்வைகளில் அலர்ஜி ஏற்படுத்தும் நுண்ணியிரிகள் இருக்கலாம். எனவே அவற்றை அடிக்கடி நன்றாக அலசி, துவைத்து காயப்போட்டு உபயோகிக்கவேண்டும். செல்லப்பிராணிகள் வேண்டாம்.
குறைந்த பட்சம் 6 மாதம் வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கின்றனர் மருத்துவர்கள். எனவே உங்கள் செல்லங்களை ஆஸ்துமா நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். நோயை கட்டுப்படுத்துங்கள் சரியான நேரத்தில் தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வதும், அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்களை தவிர்ப்பது போன்றவை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயல்முறைகள் ஆகும். எனவே கொடிய நோயான ஆஸ்துமாவில் இருந்து வருங்கால சமுதாயத்தை காக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதும் அவசியமாகும்.