வாழ்வு பெற

ஊனியல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டமெல்லாம் அந்த இயல்புக்கு உரியவற்றின்மீதே இருக்கும்; ஆனால் ஆவிக்குரிய இயல்புக்கேற்ப வாழ்வோரின் நாட்டம் ஆவிக்கு உரியவற்றின் மீதே இருக்கும். ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே; ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும் - உரோமையர் 8-5,6

பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலிய பாவங்களில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைய முடியாது. எனவே தூய ஆவியின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் இவற்றை அணிந்து கொள்வோம். 

சவுல் அரசன் தாவீது மீது பொறாமை கொண்டு தாவீது அரசனை கொல்வதற்கு அநேகம் முறை முயற்சி செய்தார். அப்படி பொறாமையோடு, கொலைவெறி,சுயநலம் கொண்டு அலைந்த சவுல் பின்னாளில் தம் வாளை எடுத்து, தாமே அதன்மீது வீழ்ந்து மடிந்தார்.

பேரரசைபட்டு 30 வெள்ளிகாசுக்காக இயேசுவை காட்டி கொடுத்த நம்பிக்கை துரோகி யூதாஸ் நாண்டு கொண்டு செத்தான். மொர்தெகாயை கொல்ல வேண்டும் என்றும் யூதரை கூண்டோடு ஒழிக்க வேண்டுமென்று ஆமான் சதி திட்டம் தீட்டினான். கடைசியில் மோர்தகாய்க்காக அவன் உண்டாக்கின அதே தூக்குமரத்தில் அவன் தொங்கி இறக்க நேரிட்டது. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா  பிற்பகல் தாமே வரும். அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும். ஆண்டவருக்கு எதிரான எல்லா  மேட்டிமையான பாவங்களையும் விட்டுவிட்டு ஆண்டவரின் வார்த்தைகளை பின் பற்றி ஆவியின் வழி நடப்போம்.  

ஜெபம்: ஆண்டவரே, நாங்கள் பலவீனர்கள். எங்களுடைய வாழ்வில் பிறருக்கு தீங்கு செய்யாத நல்ல உள்ளத்தை தாரும். ஆண்டவரே நாங்கள் ஆறுதல் பெறுவதைவிட ஆறுதல் அளிக்கவும், புரிந்து கொள்ளப் படுவதைவிட பிறரை புரிந்து கொள்ளவும், அன்பு செய்யப்படுவதைவிட பிறரை அன்பு செய்யவும்  வரம் தாரும். #veritastamil #rvatamil #companionpriest