பாடுகளின் செய்வாய்
இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு ‘மண்டை ஓட்டு இடம்’ என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர் - யோவான் 19:17. இயேசுவின் சிலுவைப் பாதையில் சந்திந்த உள்ளங்கள் ஆளுநன் பிலாத்து இயேசுவைத் தீர்ப்பிடுகிறான். உண்மை ஊமையான நேரம் இது. நீதியை அவனுடைய பதவிக்காக சாகடிக்கும் உள்ளம். பதவியும் பணமுமே முதன்மை பெற்றது. நாம் உண்மைக்கு சான்று பகர்கிறோமா?
தாயும், மகனும் சந்திக்கும் நேரம் கொடுமையானது. அன்னை மரியாள் இந்த சோதனையை விரும்பி கேட்கவில்லை. கடவுளுடைய வார்த்தைக்கு கீழ் படிந்ததால் கிடைத்தது. ஆயினும் தன் மகனுக்கு தெம்புட்டுகிற உள்ளம். நாம் நம் பிள்ளைகளுக்கு சோதனைகளின் போது ஊக்கமளிப்பபவர்களா?
சீமோன் இயேசுவுக்கு உதவுகிற நேரம் இயேசுவிற்கு தோள் கொடுக்கிறார். படைத்த இறைவனின் பாடுகளிலே சிறு உதவி செய்யும் உள்ளம். பிறருடைய துன்பத்தில் பங்கெடுக்கும் நல்ல மனம் நமக்கு உள்ளதா? வெரோணிக்காள் தன்னுயிரை துச்சமென நினைத்து, துணிந்து பரிவோடு இயேசுவின் திருமுகத்தைத் துடைக்கும் துணிவான உள்ளம். திருமுகமே பரிசாக கிடைக்கும் வெற்றியின் நேரம். பிறர் துயர் துடைப்பத்தில் நம் பங்கு எப்படி உள்ளது?
அழுத ஜெருசலேம் பெண்களுக்கு இயேசு ஆறுதல் கூறும் நேரம். ஆலோசனை கூறுகிறார் இயேசு. மென்மையான உள்ளம். நாம் அடுத்தவரின் துன்பத்தில் ஆறுதல் கூறுகிறோமா? இயேசுவின் ஆடைகள் உரியப்பட்டு அதன் மீது சீட்டு போடுகிற நேரம். மனித மாண்பு ஏலம் விடப்படும் வக்கிரமான உள்ளம். நாம் பிறருடைய மானம் காப்பதில் சிறிதேனும் முயற்சி செய்தோமா?
சிலுவைப் பாதையின் உச்சக்கட்ட நேரம். நல்லதைச் சொல்ல நடந்த கால்களும், நல்லதைச் செய்த கைகளும் கூரிய ஆணிகளால் துளைக்கப்படுகிற கொடுமையான உள்ளம். நாம் எத்தனை முறை மென்மையான இதயத்தைக் கிழித்திருக்கிறோம் சிந்திப்போம். இயேசுவின் அன்பு சீடரிடம் தாயையும். தாயிடம் சீடரையும். ஒப்படைத்துவிட்டு, மீதம் இருக்கும் என் உயிரும் உனக்குத்தான் என்று இயேசு தன்னையே அளிக்கும் அர்பணிப்பின் உள்ளம்.
குடும்பத்தில் நம்முடைய அர்ப்பணிப்பு எப்படி உள்ளது. இத்தகைய துன்பம் எந்த தாய்க்கும் வரகூடாது தாயின் மடியில் இயேசு இளைப்பாருகிற போராட்டத்தின் உள்ளம். தாயின் அன்பை எந்த அளவில் மதித்து நடக்கிறோம். அகிலம் படைத்த ஆண்டவன் ஆழ குழியில் அடங்கும் நேரம். அரிமத்தியா ஊர் சூசை ஆண்டவருக்கு கல்லறையை விட்டு கொடுக்கும் உள்ளம். நாம் பிறருக்கு என்று எதை விட்டு கொடுத்துள்ளோம் சிந்திப்போம்.
ஜெபம்: ஆண்டவரே, நாங்களும் சுயநலத்திற்கு, ஆணவத்திற்கு, மனிதத்தன்மைய்ற செயலுக்கு, சாதிவெறிக்கு, கொள்கையற்ற வாழ்வுக்கு, சந்தேகப் புத்திக்கு, ஆளாகாமல் உமக்கு விருப்பமுள்ள பிள்ளைகளாக உம்மை போன்று வாழ அருள் தாரும். எங்களை மன்னியும். ஏற்றுக்கொள்ளும். ஆமென்.