உருவாக்கும் இறைவன்

நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால் கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார்.

தொடக்க நூல்50-20.

யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பு மேல் பொறாமை கொண்டு அவரை அடிமையாக விற்று விட்டனர். ஆனால் ஆண்டவரோ அந்த செயலை நன்மையாக மாற்றி யோசேப்பை உயர்த்தினார் . கடவுள் அவரை பார்வோனுக்குத் தந்தையாகவும், அவர் வீடு முழுவதற்கும் தலைவராகவும், எகிப்து முழுவதற்கும் ஆளுநராகவும் ஏற்படுத்தினார்.  பின்னாளில் அந்த யோசேப்பு தான் அவர் சகோதரர்களையும் அவர்கள் குடும்பத்தையும் பேணி காத்தார்.அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்;  பஞ்ச காலத்தில் உணவு கிடைக்க வழி செய்தார் 

கடவுளுக்கு நாம் உண்மையாக நடந்தால், அவர் நமக்கு வரும் தீமையையும் நன்மையாக மாற்றுவார்.  நாம் பலருக்கு ஆசீர்வாதமாக இருக்க செய்வார். நம்மால் பலர் பயனடைய செய்வார்.

 

ஆண்டவரே, எங்களுக்கு வரும் தீமைகளை நன்மையாக மாற்றும்.  நாங்கள் பிறருக்கு பயன் அளிக்கும் பிள்ளைகளாக இருக்க செய்யும்  .  எங்கள் கைகள் கொடுக்கும் கரங்களாக அமையட்டும். எங்கள் கால்கள் பிறருக்கு ஓடி ஓடி உதவி செய்ய பயன் படட்டும். எங்கள் மனமும் நாவும் எப்போதும் உம்மையே துதிக்க செய்யும்.  ஆமென்.