உம் கரத்தில்
ஏசாவோ அவருக்கு எதிர் கொண்டு ஓடி அவரை அரவணைத்து இறுகக் கட்டித்தழுவி முத்தமிட்டார். இருவரும் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினர்.
தொடக்க நூல் 33-4.
. ஏசாவுடைய ஆசீர்வாதங்கள் அனைத்தையும் யாக்கோபு பெற்றுக் கொண்டதனால் கோபங்கொண்ட ஏசா யாக்கோபை கொல்ல முயற்சிக்கிறார். ஏசாவுக்கு பயந்துதான் யாக்கோபு ஊரை விட்டே போகிறார். அவ்வளவு பழி உணர்வு கொண்ட ஏசா பின்னாளில் தன் சகோதரனை இறுகக் கட்டித் தழுவி முத்தமிடும் அளவுக்கு கடவுள் அவரை மாற்றினார். ,“என் சகோதரனே, ஏற்கெனவே என்னிடம் மிகுதியாக உள்ளது. உன்னுடையதை நீயே வைத்துக்கொள்”என்று சொல்லும் அளவுக்கு கடவுள் எதிரியான ஏசாவை மாற்றினார். யாக்கோபு தன் சகோதரன் ஏசா 400 பேரோடு வருவதை கண்டு பயப்படுகிறார். ஆனால் நடந்தது என்ன. அவர் தன் சகோதரன் யாக்கோபை அன்போடு கட்டி முத்தமிட்டார்.
ஆண்டவர், எதிரிகளிடமிருந்து நம்மை பாதுகாப்பது மட்டுமல்ல, அவர்களை நம் சார்பில் வர செய்வார். அவர்களோடு விருந்துண்ண செய்வார். நம் கடவுள் நமக்காக பரிந்து பேசுவார். பயப்பட வேண்டாம். யாக்கோபு செய்தது போல ஆண்டவரிடம் நம் பயங்களை எடுத்து சொல்லி வேண்டுவோம் .அவரே எல்லா சூழ்நிலைகளையும் மாற்றுகின்ற கடவுள்.
அன்பு ஆண்டவரே, எங்களை முற்றிலுமாக உம் கையில் ஒப்பு கொடுக்கிறோம். எங்களுக்கு எதிராக செயல்படும் அனைத்தையும் எங்கள் சார்பில் வர செய்யும். நாங்கள் பயமின்றி , குழப்பமின்றி , சமாதானத்தோடு வாழ அருள் புரியும். ஆமென்.