அவருக்கு செவிசாய்க்க
அவரும் ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினார். ஆண்டவர் அவருக்கு ஒரு மரத்துண்டைக் காட்டினார். அதை அவர் தண்ணீரில் எறிய, தண்ணீரும் சுவைபெற்றது. அங்கே சட்டங்களையும் ஒழுங்குகளையும் தந்து ஆண்டவர் அவர்களைச் சோதித்தார்.
விடுதலைப் பயணம் 15-22.
இஸ்ரேல் மக்கள் மூன்று நாள்கள் சூர் பாலைநிலத்தில் பயணம் செய்தனர். அங்கு அவர்களுக்கு குடிக்க தண்ணீர் எதுவுமே தென்படவில்லை. மாரா என்ற இடத்தில் தண்ணீர் இருந்தது. ஆனால் அது கசப்பாக இருந்தது . உடனே அவர்கள் முறுமுறுக்கிரார்கள்.
ஆண்டவர் ஒரு மரத்துண்டை காட்டுகிறார். அதை தண்ணீரில் போட்டவுடன் தண்ணீர் சுவையாக மாறுகிறது. பின்னர் அவர்கள் ஏலிம் சென்றடைந்தனர். அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தன. தண்ணீருக்கு அருகில் அவர்கள் பாளையம் இறங்கினர்.
அந்த பாலை நிலம், மாராவின் தண்ணீர் எல்லாவற்றையும் கடந்து தான் அவர்கள் ஏலிம் சென்றனர்.
நம் வாழ்விலும் சில நிகழ்வுகள் நிகழும்போது மிகவும் வேதனையாக இருக்கும். ஆனால் பொறுமையுடன் நாம் காத்திருந்தால் கண்டிப்பாக கடவுள் அதில் ஒரு திருப்புமுனையை தருவார் . ஒரு மரத்துண்டை காட்டியது போல சில வழிகளை காட்டி அதை நமக்கு நன்மையாக மாற்றுவார் . அதற்கு நாம் அவர் பாதத்தில் அமர்ந்து ஜெபிக்க வேண்டும் . அவர், துன்பங்களை இன்பமாக மாற்றுகிற கடவுள். கசப்புகளை மாற்றி மகிழ்ச்சி தரும் இறைவன். இன்றைய துன்பங்கள் இறை ஆசீரால் நமக்கு நன்மையாக மாறும். கவலை வேண்டாம்.
ஆண்டவரே, எங்கள் தந்தையே, உமக்கு நன்றி. ஆண்டவரே நாங்கள் உம்மையே நோக்கி பார்க்கிறோம் . துன்பங்களை இன்பமாக மாற்றும். தாகத்தோடு இருக்கும் எங்களுக்கு ஜீவ தண்ணீரை காட்டும் . எங்கள் வாழ்வில் எல்லா நேரங்களிலும் எங்களோடு இருந்து எங்களை வழிநடத்தும் . எங்கள் உற்றார் உறவினர்கள் சொந்தங்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் அனைவரையும் ஆசீர்வதியும். ஆமென்.