அழைக்கின்ற இறைவன்

அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். “மோசே, மோசே” என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் “இதோ நான்” என்றார்.

விடுதலைப் பயணம் 3-4

கடவுள்  மோயீசனை அழைத்தார்.  மோயீசன் முரடன்,. கொலை செய்துவிட்டு அதற்கு பயந்து சொந்த ஊரை விட்டு வெளியே  வாழ்ந்து வந்தவர்.  அவர் ஒரு திக்கு வாயன். முன் கோபி. ஆண்டவர் அவரை அழைத்தார்.  ஆண்டவர் நம்முடைய குணம், அழகு, திறமைகளை பார்த்து நம்மை அழைக்கிறவர் இல்லை.  நம்மை நமக்காக அழைகிற இறைவன்.  

மோயீசனை அழைத்தார். அந்தப் பாலை நிலத்தில் 40 ஆண்டுகள் இஸ்ரேல் மக்களை வழிநடத்தும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். அவரோடு இருந்து அவரை வழிநடத்தினார்.  அவர்களுடைய தேவைகளை எல்லாம் அவர் மூலமாக சந்திக்க செய்தார்.  அழைத்ததோடு விடவில்லை அவர்களை  நடத்தி செல்லும் ஆற்றலையும் கொடுத்தார். இறுதிவரை உடனிருந்தார். 

நானே உன்னை அழைத்தேன் .உன்  பெயரைச் சொல்லி அழைத்தேன். நீ என்னுடையவன் என்று கூறி அழைக்கின்ற இறைவன் அவர். அவர் அழைத்தால்  நாம் பயமின்றி செல்லலாம்.    ஏனெனில் அவர் நம்மோடு வருவார். நாம் சோர்வுரும் போது  நம்மை ஏந்துவார். தாங்குவார். நம்மை தீங்குக் கு தப்புவிப்பார். 

 

அன்பு ஆண்டவரே,. எங்கள் ஒவ்வொருவரையும், நீர் அழைத்து,  தந்தை தாய், கணவன் ,மனைவி, பிள்ளைகள் குருக்கள் துறவிகள் என பல பணிகளை பிரித்து கொடுத்துயிருக்கிறீர்.  ஆண்டவரே நாங்கள் ஒவ்வொருவரும்  எங்களுடைய அழைப்புக்கு ஏற்ப, சோர்ந்து போகாமல்  பணி உம் துணையை தாரும். தூய ஆவியின் வரங்கலால் நிரப்பும் ஆமென்.