எங்களை தெரியுமா?

பனங்காடை என்பது ஆசியக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் காணப்படும் ஒரு பறவை. இப்பறவை பாலக்குருவி என்றும் அழைக்கப்படும்.[2] இது ஈராக் முதல் தாய்லாந்து வரை காணப்படுகிறது. இப்பறவை நீலமும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். திறந்த புல்வெளிகளிலும் காட்டுப்பகுதிகளிலும் பொதுவாகக் காணப்படும். ஆண், பெண் பறவைகளுக்கிடையே தோற்றத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை. 

விளைநிலங்கள், அடர்த்தி குறைந்த காடுகள், திறந்த புல்வெளிகள் ஆகியவையை இவற்றின் முதன்மையான வாழிடம். எனினும் இவற்றை நகர்ப்புறங்களில் மின்கம்பிகளின் மீது அமர்ந்திருக்கக் காணலாம்.

இப்பறவைகள்சிறு பூச்சிகள்ஊர்வனதவளை முதலானவற்றை உணவாகக் கொள்ளும். இவை தான் பிடித்த இரையை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்து உண்ணும்.[3] மார்ச் முதல் சூன் வரையான காலம் இவற்றின் இனப்பெருக்க காலம். தன் இணையைக் கவர இவை மேலே இருந்து சுழன்று சுழன்று பறந்து கீழே வந்து, மீண்டும் மேலே ஏறிப் பறக்கும் இயல்பைக்கொண்டதாகும்.

இப்பறவை கர்நாடகாஆந்திராஒரிசாபீகார் மாநிலங்களின் மாநிலப்பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பனங்காடையைப் பார்த்தால் நல்ல சகுனம் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு[5].

முன்பு மேனாட்டுச்சீமாட்டிகள் உடையலங்காரத்திற்கு இதன் சிறகுகளைப் பயன்படுத்தியதால் இவை வேட்டையாடப்பட்டு இதன் இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

கருங் கரைச்சான்

இரட்டைவால் குருவி அல்லது கரிக்குருவி  (Black Drongo) என்பது ஆசியக் கண்டத்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு சிறு பாடும் பறவை. இப்பறவை கரிச்சான், காரி, கருவாட்டு வாலி என்றும் அழைக்கப்படும். திவ்யப் பிரபந்தங்களில் வழங்கப்படும் ஆனைச்சாத்தன் என்ற பெயரும் இப்பறவையைக் குறிப்பதே . இது தெற்காசியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதாவது தென் மேற்கில் ஈரான் தொடங்கி இந்தியாஇலங்கையிலும் கிழக்கில் சீனாஇந்தோனேசியா வரையிலும் காணப்படுகின்றது.

இப்பறவை முழுவதும் கருப்பு நிறத்திலும் வால் பகுதி நுனியில் இரண்டாகப் பிரிந்தும் இருக்கும். வாலின் நீளம் ஏறத்தாழ 28 செ.மீ இருக்கும். பூச்சிகளை இரையாகக் கொள்ளும் இப்பறவை பொதுவாக திறந்தவெளியான வேளாண்மை நிலங்களிலும் அடர்த்தியற்ற காடுகளிலும்வசிக்கறது. இவை பயமற்ற பறவைகளாகும். இது தனது கூட்டின் எல்லைக்குள் வரும் தன்னை விடப்பெரிய பறவைகளைக் கூட இப்பறவை தாக்கும் குணம் கொண்டது.

மைனா

சாதாரண மைனா தென்னாசியாவில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாஇலங்கை வரையான நாடுகளில் காணப்படும் மைனா இனமாகும். இது இந்திய மைனா எனவும் அழைக்கப்படுகிறது. இது மனிதக் குரலில் கதைக்க வல்லதாகையால் பேசும் மைனா எனவும் அழக்கப்படுகிறது. இது 25 சென்ரிமீட்டர் நீளமான பறவையாகும்.

சிட்டுக்குருவி 

இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள்அடைக்கலக்குருவிகள் ,ஊர்க்குருவிகள்சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவியாகும். இவை உண்மையான சிட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. சிட்டுக் குருவிகள் உருவத்தில் சிறியனவாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். இவை 8 முதல் 24 செ.மீ நீளமுள்ளவை. இவை 27 முதல் 39 கிராம் எடை கொண்டவை. ஆசியாஐரோப்பாஆப்பிரிக்காஅமெரிக்கா போன்ற பல நாடுகளில் குருவி இனங்கள் உள்ளன. இவை எங்கும் காணப்படுபவை. சிட்டுக் குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும். சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. சிட்டுக் குருவிகள் அனைத்துண்ணிகள்.தானியங்களையும்புழுபூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். சில வகைக் குருவிகள் பூ மொட்டுகளையும் உண்ணும்.

 

இதுபோன்ற  இன்னும் அரிய பறவைகள் நம்ம ஊர்ல இருந்துச்சு ஆனால் இப்போ இதெல்லாம் கண்ணிலேயே பார்க்க முடியல. ஏன்னா! இந்த  இந்த நவீன தொழில்நுட்ப காலகட்டத்திலும், மனிதர்களாலும் இந்த அரிய வகை பறவை இனங்கள் எல்லாம்  அழிந்திட்டும் காணாமலும் போயிடுச்சு. இந்தப் பறவைகள் நமக்கும், விவசாயிகளுக்கும் நிறைய  பயன்கள் இருக்கு.

என்னன்னு பார்த்தீங்கன்னா!  இந்த பறவைகள் எல்லாம் சிறுசிறு பூச்சிகள்  அதுங்களுக்கு உணவு.  ஏன் இப்ப கூட நம்ம வடநாட்டு  பக்கம் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமா விவசாய நிலங்களை அழித்து விடுவது. இதனால விவசாயிகளுக்கு  பெரும் இழப்பு ஏற்பட்டது. இந்தப் பூச்சிகள் எல்லாம் தான்  இந்த பறவைகள்  உணவா  இருக்குது. இந்த பனங்காடை பறவை பொதுவாக புறநகர்ப்பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் காணப்படும் வெட்டுக்கிளிகளை உண்ணுகிறது மற்றும் அந்த பறவை  வெட்டுக்கிளியின் உயிரியல் எதிரியாகும். 

இங்குள்ள வனத்துறையின் உயிரியலாளர்களின் கூற்றுப்படி, வெட்டுக்கிளிகளை உண்ணும்   இரட்டை வால் கொண்ட கருங் கரைச்சான் என்னும் பறவை வெட்டுக்கிளி படையெடுப்பைக் கட்டுப்படுத்தலாம்."கருங் கரைச்சான் ஒரு மணி நேரத்திற்கு 150 பூச்சிகள் வரை உண்ண  முடியும்.

மேலும் மாங்குயில்,மைனா,மரங்கொத்தி, நாரை, தேன் சிட்டு, சிட்டுக்குருவி போன்ற பறவைகள் உள்ளன, அவை முட்டையிடுவதற்கு முன்பு இனப்பெருக்கம் செய்யும் வெட்டுக்கிளிகளை  அழிக்கக்கூடும். இந்த பறவைகள் எல்லாம்  வயல் வெளியில் இருக்கும் புழு பூச்சிகள்,  வெட்டுக்கிளிகள் சிறியதாக இருக்கும்போதே அதை பிடித்து தின்று விடும். அதனால் இந்தப் பறவைகள் இருந்திருந்தால் வெட்டுக்கிளிகள் பெரிதளவு பெருக்கும் தன்மை இல்லாமல் போயிருக்கும். ஆதலால் விவசாயம்  மற்றும் பயிர்கள் காக்க பட்டிருக்கும்.“பூச்சி படையெடுப்பை கட்டுப்படுத்தும்  பறவையின்  பன்முகத்தன்மையை நாம் இழக்கிறோம் என்பது ஒரு உண்மை.

ஆனால் இப்போது இந்தப் பறவை இனங்களை கண்ணில் பார்க்க முடியவில்லை .ஏனென்றால், இந்த  சுற்றுச்சூழலில் நவீன தொழில்நுட்பம் அதில் ஏற்படும் கதிர்வீச்சுகளாலும்  மனித சமூகத்தாலும் பறவைகள் இடம்  பெயர்ந்தும் மற்றும் அழிந்தும்  போய்விட்டது. ஆதலால் இந்த  இயற்கை, விவசாயம் பறவைகள் மற்றும் மற்ற உயிரினங்கள் பாதுகாக்கப்படவேண்டும். இதன் வழிகள் நம்மிடம் உள்ளது.

 

 

 

Add new comment

11 + 0 =