சுதந்திரம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 16.04.2025

உன்னை உன்னைய விட யாராலும் அடிமைப்படுத்த முடியாது.

இதை நீ உணராத வரை சுதந்திரத்தை நீ பெறவும் முடியாது.

சுதந்திரம் என்பது கடையில் வாங்கும் ஒரு பொருள் அல்ல அதற்கு விலை கேட்பதும் கொடுப்பதும் விவாதம் செய்வதும் என்று சூழல்களை உருவாக்க.

அது ஒருவனின் உணர்வுக்குள் அங்கீகரிக்கப்பட்டது அதை யார் ஒருவன் உணர்கிறானோ அவனால்தான் அவனும் அவன் தேசமும் முழுமையான சுதந்திரத்தை பெற முடிகிறது.

அவனால் தான் இந்த தேசம் நடுநிலைப்படுகிறது.

கேட்பது மறுப்பதும் சுதந்திரம் அல்ல அது ஈகோ தாழ்வு மனப்பான்மை அதுவே வன்முறை.

நடுநிலை இல்லாத ஒன்றில் சுதந்திரம் வாழ்வதில்லை அது உனக்கும் அப்பாற்பட்டது அது உனக்கு அடிமை இல்லை.
நீ அதை உணராத வரை அனைத்தும் உன்னை அடிமைப்படுத்தும்.
ஒருவர் உன் சுதந்திரத்தை சொல்லிக் கொடுப்பதினால் நீ பெற்று விட முடியாது.

 அது உன்கிட்ட இருக்குது அப்படின்னு நீ உணரும் போது தான் அதை பெற முடியும்.

எந்த சுதந்திரம் நம் தேசத்திற்கு புத்துணர்வை தருகிறதோ அதுவே நடுநிலை பெற்றது அப்படி ஒரு சுதந்திரத்தை உணரு உன்னால் இந்த தேசம் புதுமை பெறட்டும்.
நடுநிலை என்பது நியாயத்திற்கு இடம் கொடுப்பது என்பதாகிறது.

அது எந்த கட்டமைப்புக்குள்ளேயும் சிக்க வைக்க முடியாது.

அது விவாதத்திலும் விமர்சனத்திலும் இல்லை கொடுப்பதிலும் பெருந்தன்மையான மனப்பான்மையிலும் உள்ளது.

ஒருவர் எதை கொடுக்க வேண்டுமோ அதை அவன் முதலில் உணர வேண்டும்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து எம் மக்களுக்கு அமைதியும் ஒற்றுமையும் சகிப்புத்தன்மையும் கிடைக்கவும் எம் திருத்தந்தை பிரான்சிசு அவர்களுக்கு உடல் உள்ள சுகத்துடன் நெடுவாழ்வு வாழவும் நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.

மரியே வாழ்க

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி