உலக வானிலை ஆராய்ச்சி தினம் | March 23


        வானிலை, பருவமழை அளவு, மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை போன்ற பல தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையங்கள் தருகின்றன. இவற்றில், பொதுவாக நமக்குத் தெரிவது, இன்று மழை வருமா வராதா, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா போன்ற சில தகவல்கள்தான். வானிலை பற்றிய மாற்றங்களையும், இயற்கையைப் பாதுகாப்பதின் அவசியத்தையும் நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே உலக வானிலை தினம் (றுழசடன ஆநவநழசழடழபiஉயட னுயல); நமக்குச் சொல்வது. இதனை ஜெனீவாவிலுள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகம் 1950 ஆம் ஆண்டு மார்ச் 23 இல் கொண்டாடவேண்டும் என அறிவித்தது. உலகின் தட்பவெப்பநிலை உயர்வால் கடலின் நீர்மட்டம் உயர்கிறது, பூமியின் வெப்பநிலையும் கூடிக்கொண்டே செல்கிறது. அடுத்துவரும் தலைமுறைக்கு வாழ்வதற்கு ஏற்ற வானிலையை மாற்றிக்கொடுப்பது நம்முடைய கடமையாகும்.
        கி.மு. 687 முதல் 2700 ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகம் பூமியுடன் மோதுவதுபோல மிக அருகில் நெருங்கிவந்தது. இரண்டு கோள்களின் ஈர்ப்பு விசை காரணமாக இரண்டின் சுழற்சியும் சுற்று வேகமும் நிலைதடுமாறியது. இந்த இயற்கை நிகழ்வால் வானில் பெரிய இடி முழுக்கமும் வெடிச்சத்தமும் கேட்டது. ஆஸ்திரியப் படை வீரர்கள் 1,85,000 பேர் அந்த இடத்திலேயே கருகி மாண்டதாக டீழழம ழக முiபௌ ரூ ஊhசழniஉடநள என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே இரவில் "புவியே அதிர்ந்தது" விண்மீன்கள் மழைபோலப் பொழிந்தன என டீயஅடிழழ டீழழமள என்ற சீனப் புத்தகத்திலும் வருணிக்கப்பட்டுள்ளது.
        தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டுமின்றி, மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது இன்றைய தலைமுறைக்கு, சவாலாக திகழ்கிறது. தொழிற்சாலைகளால் காற்றில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிக்கிறது. ஓசோன் பாதிப்புக்குள்ளாகி, பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதில் வளரும் நாடுகளை விட, வளர்ந்த நாடுகளுக்கு தான் அதிக பங்கு இருக்கிறது. 
        வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாட்டால், வரும் காலத்தில் வறட்சி, வெள்ளப் பெருக்கு, புயல் போன்ற பாதிப்புகளை அடிக்கடி சந்திக்க நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். வெப்பம் அதிகரிப்பதால் உலகில் உள்ள பனிப்பாறைகள் உருகி எதிர்காலத்தில் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் நிலப்பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். மற்ற நாடுகளைப் போல, இந்தியாவும் நாட்டில் உள்ள நதிகளை இணைப்பது குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு பகுதியில் வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க முடியும்.

Add new comment

3 + 3 =