உலக விருந்தினர் கூட்ட தினம் | April 3

உலக விருந்தினர் கூட்டத் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 3 இல் கடைபிடிக்கப்படுகிறது. மனித இனம், மகிழ்ச்சிக் கொண்டாட்டம் ஆகியவற்றை அர்ப்பணிப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் உலக தினமாக அனுசரிக்கப்படுகிறது. வன்ன போந்தா எழுதிய 'பிளைட்: ஏ குவாண்டம் பிக்சன்" என்ற நாவல் வெளியீட்டிற்குப் பின்பு 1996 ஆம் ஆண்டு முதல் உலக விருந்தினர் கூட்டத் தினம் அனுசரிக்கப்படுகிறது. நம்முடைய விருந்தினர்கள் யாராகவும் இருக்கலாம். அவர்கள் திடீர் மனிதர்களாகவும், நம்முடைய அன்பும் உணரப்படுபவர்களாகவும் இருக்கலாம். இந்த நாள் மிகவும் பிரபலமாகக் கொண்டாடப்படவில்லை என்றாலும், விருந்தினர்களை உபசரிப்பதில் பெயர்பெற்ற நாம் இந்த நாளை சிறப்பிப்பதில் அர்த்தமுண்டு. தெரிந்தவர்களைவிட, தெரியாதவர்களையும் தேவையில் உள்ளவர்களையும் இந்த நாளில் விருந்தினர்களாக அழைத்து, அன்பைப் பகிர்வோம்.
Daily Program
