பேதுரு தனது அச்சத்தையும், குழப்பத்தையும், போராட்டங்களையும் தாண்டி, இயேசுவின் மீது தனது முழு நம்பிக்கையையும் வைக்க, இந்த தனிப்பட்ட அவரது வல்ல செயலின் (மீனில் நாணயம் காணுதல்) அருள் அவருக்குத் தேவை என்பதை இயேசு அறிந்திருந்தார்.
ரக்ஷா பந்தன் போன்ற மதங்களுக்கு இடையேயான கொண்டாட்டங்கள் இன்றைய உலகில் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் அவசியத்தை சக்திவாய்ந்த நினைவூட்டலாக வழங்குகின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார்.
2014ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் புனித லூர்தன்னை விழாவன்று நமக்கென ஒரு தொலைக்காட்சி; கத்தோலிக்கருக்கென ஒரு தொலைக்காட்சியாக மேனாள் தலைவர் ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்களின் ஆசீருடன் இயக்குநர் அருட்தந்தை டேவிட் ஆரோக்கியம் அவர்களின் தலைமையில் 18 மறைமாவட்ட கலைத்தொடர்பக இயக்குநர் அருட்தந்தையர்கள் ஒருங்கிணைப்பில் நமது மாதா தொலைக்காட்சி உதயமானது. சாந்தோம் கலைத்தொடர்பு நிலையத்தின் கனவு குழந்தை நமது மாதா தொலைக்காட்சி என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
படத்தில்இ திருத்தந்தை பிரான்சிஸ் அன்புடன் சிரித்துக்கொண்டே தனது கையை நீட்டுவது போல காட்டப்பட்டுள்ளது. ஒரு வெள்ளைப் புறா தனது விரல் நுனியில் இறக்கைகளை அசைத்து, அமைதி மற்றும் பரிசுத்த ஆவியின் அடையாளத்தைத் தூண்டுகிறது.