நிறைவாக, பாறையின் மீது கட்டப்பட்ட வீடு போல நமது வாழ்க்கையையும் கிறிஸ்துவின் மீது கட்டுவோம். உலகம் மாறலாம்; சூழ்நிலைகள் மாறலாம்; சோதனைகள் வரலாம். ஆனால் கிறிஸ்துவின் மீது கட்டப்பட்ட வாழ்க்கை உறுதியாக நிற்கும்.
அன்புதான் இந்த உலகத்தை ஆள வேண்டும் என்ற மகத்தானச் சிந்தனையை நமக்கு வழங்கியுள்ளார். நம்முடைய வாழ்வு அன்பினால் கட்டப்படும் பொழுது இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர முடியும்.
சிலுவையின் நற்செய்தியை அறிவிக்கவே என்பதோடு, உலகத்தின் பார்வையில் சிலுவையின் செய்தி மடமையாக தோன்றினாலும் இறைமக்களாக உள்ள நமக்கு அது கடவுளின் வல்லமையின் வெளிப்பாடு என்கிறார் பவுல்.
தந்தையாகிய இறைவன் அந்த விருந்தைத் தயாரித்து, அனைவரும் அதில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறார். அதனால்தான் அவர் நம் அனைவரையும், “விருந்துக்கு வாருங்கள்!” (மத்தேயு 22:4)