இரண்டாம் வத்திக்கான் சங்கம் |லுமென் ஜெண்டியம் |இம்மானுவேல் |veritastamil

லுமென் ஜெண்டியம்
இரண்டாம் வத்திக்கான் சங்கம் நம் திருஅவைக்கு கொடுக்கப்பட்ட ஒரு அழகான பொக்கிஷம் இந்த யூபிலி ஆண்டை முன்னிட்டு நம் திருத்தந்தை வத்திக்கான் சங்க எட்டினை நம்மை வாசிக்க அழைப்பு விடுத்தார் அதிலே நாம் முன்னதாக சாக்ரோசாங்க்டம் கான்சிலியம் (Sacro santum councilum) என்ற தலைப்பை பார்த்தோம் இன்று நாம் பார்க்கப்போகும் தலைப்பு லுமென் ஜெண்டியம் (Lumen gentium)
திருஅவை லுமென் ஜெண்டியம்
முதலிலே நாம் எப்படி வத்திக்கான் சங்க எட்டினை புரிந்துக்கொள்வது என்று பார்ப்போம் இரண்டாம் வத்திக்கான் சங்கம் துவங்கியபோது மறைந்த திருத்தந்தை 23 ஆம் ஜாண் இவ்வாறு கூறினார் திருஅவை தந்தையர்களிடம் பெற்ற புதையலை இந்த திருஅவை பாதுகாக்காக்க வேண்டும் அதன்படி செயல்படுத்தவேண்டும் அதே நேரத்திலே காலத்திக்கேற்ப தம்மையே மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இதனை புரிந்துக்கொண்டோம் என்றால் இதனுடைய மூன்று கருப்பொருளை புரிந்துக்கொள்ளலாம்.
- திருஅவை தன்னுடைய காலத்திற்கேற்ப புதுப்பித்தல்
- நம்முடைய மூலப்பொருள் என்ன என்பதை அறிந்துக்கொள்ளுதல்
- பாரம்பரியம் மற்றும் திருவிவிலிய கருத்துக்களை காலத்திற்கு ஏற்றவாறு புரிந்து மாற்றி அமைத்தல்.
இன்று நாம் பார்க்கவிருக்கும் தலைப்பு திருஅவை லத்தீன் மொழியிலே (Lumen gentium ) எளிதாக புரிய வேண்டுமென்றால் உலகின் ஒளி (Light of the World )
இதிலே நாம் முக்கியமான இரண்டு கருத்துக்களை அறிந்துகொள்வோம்.
- முதலிலே இந்த கோட்பாடு எப்படி வளர்ச்சியடைந்தது அதனுடைய வரலாற்று பின்னணி என்ன என்பதை பார்ப்பது
- இரண்டாவது அந்த கோட்பாட்டின் மையப்பொருள் என்ன என்பதை அறிந்துகொள்ளுதல்.
வரலாற்று பின்னணி
1962 ஆம் ஆண்டு துவங்கி 1964 ஆம் ஆண்டு வரை ஏறக்குறைய நான்கு அமர்வுகள்.
முதல் அமர்விலே திருஅவையின் வெளிப்புற அம்சங்கள் கொண்டுவரப்பட்டது ஆனால் இது பல்வேறு விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டது இதிலே முக்கியமான நோக்கமாக திருப்பணியாளர்கள் மேலாதிக்கத்தை காட்டுவதாக என்ற ஒரு கருத்து எழுந்தது.
அதன் அடிப்படையிலே இரண்டாவது அமர்விலே அதனை மாற்றி அமைத்து ஒரு கோட்பாட்டினை கொண்டுவந்தார்கள் அது ஒரு மிக பெரிய விவாதமாக மாறியது ..அன்னை மரியாவை திருஅவையின் கோட்பாட்டிலே கடைசி பகுதியாக வைப்பதா..? அல்லது அன்னை மரியாவுக்கு என்று ஒரு தனி கோட்பாட்டினை கொடுப்பதா? என்று ஒரு விவாதமாக அமைந்தது ஆனால் பெரும்பாலோனோர் அன்னை மரியா திருஅவையின் அன்னை அதனாலே இந்த திருஅவைக்கு கடைசியாக அன்னை மரியாவை வைத்து ஒரு பகுதியை இயற்றுவது தான் சிறந்தது என்று கூறினார்கள்..
எனவே கடைசி பகுதியாக (OUR LADY) அன்னை மரியா பற்றி ஒரு பகுதி அமைப்பது என்று இரண்டாவது அமர்விலே நடந்தது
மூன்றாவது அமர்விலே ஒரு சில விவாதங்கள் அமைந்தது எதைப்பற்றி என்றால் ஆயர் குழுமத்தை பற்றி விவாதங்கள் இருந்தது அதனையெல்லாம் சரிசெய்து
1964 ஆம் ஆண்டு நான்காம் அமர்விலே திருஅவை என்ற கோட்பாடு ஏற்றப்பட்டது
இதிலே ஏறக்குறைய எட்டு பகுதி அமைந்துள்ளது
திருஅவையின் கோட்பாடுகள்
- திரு அவை ஒரு மறை பொருள்
- கடவுளின் மக்கள்
- கிறிஸ்துவின் ஆட்சியாளர்கள்
- பொதுநிலையினர்
- தூய வாழ்வு
- துறவியர்
- விண்ணகத்தை நோக்கிய பயணம்
- அன்னை மரியாள்
ஆனால் அந்த எட்டு கோட்பாட்டினை நாம் கோர்வையாக புரிந்துகொள்ளுதல் எளிமையாக மனதில் நிற்கக்கூடியவையாக அமையும் .அதாவது அதனை ஒரு கதையின் கோர்வையாக நாம் புரிந்துகொள்ளுதல் மிகவும் சிறப்பாக அமைகிறது..!
1.திரு அவை ஒரு மறை பொருள்
திரு அவை ஒரு மறை பொருள் என்றால் அதிலே இருப்பவர்கள் யார் அவர்கள் தான் கடவுளின் மக்கள்
2. கடவுளின் மக்கள்
கடவுளின் மக்களை அழைத்தலிலே கொண்டு சேர்ப்பவர்கள் யார் அவர்கள் தான் கிறிஸ்துவின் ஆட்சியாளர்கள்
3.கிறிஸ்துவின் ஆட்சியாளர்கள்
கிறிஸ்துவின் ஆட்சியாளர்கள் ஆயர்கள் திருத்தந்தையோடு சேர்ந்த ஒரு ஆயர் குழுமம்
4. பொதுநிலையினர்
அதற்கடுத்த பகுதி கடவுளின் மக்களினம் என்று கூறுகின்றோம் யார் அவர்கள் என்றால் அவர்கள் தான் பொதுநிலையினர்
5.தூய வாழ்வு
எனவே இவர்கள் எல்லாம் எப்படிப்பட்ட வாழ்வு வாழ வேண்டும் எல்லாருமே தூய வாழ்வு வாழ அழைக்கப்படுகின்றோம் இது இயந்தவது பகுதி
6.துறவியர்
அந்த தூய வாழ்வு வாழ முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியவர்கள் யார் அவர்கள் தான் துறவியர் இது ஆறாவது பகுதி
7.விண்ணகத்தை நோக்கிய பயணம்
இந்த ஆறு பகுதியும் நம்மை விண்ணகத்தை நோக்கிய பயணத்திற்கு அழைத்து செல்வது இது ஏழாவது பகுதி
8. அன்னை மரியாள்
கடைசியாக இது அனைத்திற்கும் திருஅவையின் அன்னை மரியாள் ஒரு எடுத்துக்காட்டாக ஒரு கலங்கரை விளக்காக திகழ்கின்றாள் நமக்காக பரிந்து பேசி நம்மை இறைமகனிடம் அழைத்து செல்வார்கள் என்ற நம்பிக்கையில் அன்னை மரியாள் கடைசி பகுதியாக அமைகின்றது இதுதான் லுமென் ஜெண்டியம் கோட்பாட்டின் ஊள்ளடக்கம்
Daily Program
