சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கர்தினால் ஆன்டனி பூலா அவர்கள் அழைப்பு ! | Veritas Tamil

இந்தியாவின் முதல் தலித் கர்தினால், தற்போது இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் (CBCI) தலைவருமான கர்தினால் ஆன்டனி பூலா, சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுவாக உறுதி அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். 

பிப்ரவரி 16 அன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், அரசியல் சட்ட சுதந்திரங்களுக்கு வெளிப்படையான அர்ப்பணிப்பு அவசியம் என்றும் அது  பொதுமக்களின் நம்பிக்கையையும் தேசிய ஒற்றுமையையும் வலுப்படுதும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.தலித்துகள் என்பது பாரம்பரிய இந்திய சாதி அமைப்பில் கீழ்த்தட்டில் வைக்கப்பட்ட சமூகங்களை குறிக்கும் சொல்.

ஹைதராபாத்தில் CBCI தலைமைப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் பேசிய அவர், எந்தவொரு  சமூகத்தினருக்கும் எதிரான வன்முறை அல்லது மிரட்டல் போன்றவை  ஜனநாயகச் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்தார். இத்தகைய சம்பவங்களுக்கு  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்  என்றும், எந்த பாகுபாடுமின்றி அனைவரும் சமமாக  நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இறுதியாக,  திருஅவை  தலைவராக, திருஅவை  அமைப்புகளில் தலித் இன மக்கள்  அதிகம் சேர்க்கப்பட வேண்டும்   என்பதை அவர் வலியுறுத்தினார். தலைமை பொறுப்புகளிலும் ,பல முக்கிய  முடிவெடுக்கும் பொறுப்புகளிலும் தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம்  வழங்கப்பட வேண்டும் என்று அவர் ஆதரவு தெரிவித்தார்.

Tamil Survey Popup Image