இழந்த வாழ்வு மாறட்டும். || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 30.05.2024
விழுந்தவனைத் தூக்கி விடாத கரங்களெல்லாம், நீ எழுந்து விட்டால்
கை தட்டி வரவேற்கக் காத்திருக்கும்.
இழந்த வாழ்வு மாறட்டும்.
இனி உன் வாழ்வில் வசந்தம் வீசட்டும். பழி சுமந்து வாழாமல் பிறர் பாராட்ட வாழ்ந்துக் காட்டு.
எப்படினா இதோ உதாரணம்
மண்ணைப் பிளந்து விண்ணைக் காண உதித்த சிறு செடி
அடித்த பெருமழையில் தரையோடு தரையாகச் சாய்ந்து கிடக்கும்.
அதைக் காணும் நமக்கோ இப்பெருமழை அச்சிறு செடியை வீழ்த்தி விட்டதாக அந்தோ பரிதாபமாகத் தெரியும். மழை நின்ற மறுநாளில் கம்பீரமாக நிமிர்ந்து
நிற்கும் அது.
உலகமும் இப்படித் தான்
நாம் வீழ்ந்து விட்டதாகவும், நம்மை வீழ்த்தி விட்டதாகவும் நினைக்கும்.
அந்தோ பரிதாபம் நினைத்து விட்டுப் போகட்டும். அச்சிறு செடி தன் நம்பிக்கை விடாது நிமிர்ந்து நிற்பது போல் நாமும் நிற்போம் பரிதாபமாக அல்ல விஸ்வரூபமாக.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நல்லோழுக்கமும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அமைதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.
மரியே வாழ்க
கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம்.
எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள். நாளையப் பொழுது நல்லபடி விடியட்டுமே.
இனிய இரவு வணக்கம்
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி