மாறாத இலக்குகள் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 17.12.2024
வானம் உள்ளவரை இரவும், பகலும் இருக்கத் தான் செய்யும்.
வாழ்க்கை உள்ளவரை இன்பமும், துன்பமும் இருக்கத் தான் செய்யும்.
துன்பமும் தோல்வியும் அடைந்தால், மாற்ற வேண்டியது வழிகளைத் தானே தவிர இலக்குகளை அல்ல.
துன்பங்களே பல சாதனைகளைப் படைக்க வழி கொடுத்தது.
வலி தாங்கி வாழும் உங்கள் வழிகளில் வெற்றி நிச்சயம் உண்டு.
என்ன செய்கிறோம் என்பதை அறிந்து செய்யுங்கள் செய்வதை விரும்பிச் செய்யுங்கள்.
வெற்றியை நோக்கி நம் பாதங்கள் நடக்க தயாரானால், அதற்கான வழிகள் நம் முன்னே பிரகாசமாக தெரியும்.
விடாமுயற்சியுடன் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் வெற்றி நம்மை பின்தொடரும்.
நேர்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் தான் வெற்றிக்கு முக்கியம்.
செய்வதை நம்பிக்கையோடு செய்யுங்கள் உங்கள் வெற்றி நிச்சயம்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் சகிப்புத்தன்மையும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே.
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி