இல்லறம் - நல்லறம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 10.12.2024

எல்லாருமே நம் வாழும் வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும் என்று தான் விரும்புவோம்.

ஆனால், யார் யாரெல்லாம் அந்தந்த சூழ்நிலைகளை சரியாகக் கடந்து போகிறார்களோ அவர்கள் மட்டும் தான் இல்லறத்தை அடுத்தக் கட்டத்திற்குக் எடுத்துச் செல்கின்றனர்.

ஆனால்,இருவரும் வேலைக்குச் செல்லும் இந்தக் காலத்தில்,இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம் பிரிக்க இயலாதபடி வாழ்க்கைச் சமத்துவம் ஆகி விட்டது.

இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், கணவன் மீது மனைவியோ, மனைவி மீது கணவனோ, ஆதிக்கம் செலுத்தாமல் இருக்க வேண்டும்.

அதற்கு நாம் அன்பால் சாதிக்கும் மனநிலையைக் கொண்டு இருந்தால் தான் குடும்பத்தில் சண்டை, சச்சரவு இல்லாமல் மகிழ்ச்சியாக எல்லா வளமும் பெற்று பல்லாண்டு
வாழ முடியும்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும்  எல்லா நன்மைகளும் சகிப்புத்தன்மையும் ஒற்றுமையும் நிம்மதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் தாய் அருள் நிறைந்த மரியே.

மரியே வாழ்க


சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி