தொடர்பு சாதனங்கள் தொந்தரவு செய்யாமல், நம்மைக் குணப்படுத்தட்டும் | Veritas Tamil

 நம்முடைய தொடர்பு சாதனங்கள் தொந்தரவு செய்யாமல், நம்மைக் குணப்படுத்தட்டும். 

 
நேற்றைய தினம் புதன்கிழமை மூவேளை செபத்தின் போது, திருத்தந்தை லியோ, விசுவாசிகளிடம் யாரையும் காயப்படுத்தாமல், குணப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தி முறையாகப் பேசக் கற்றுக்கொள்ள ஊக்குவித்தார்.
இயேசுவின் பொது வாழ்க்கை குறித்து  திருத்தந்தை லியோ பேசியபோது, இயேசுவின்  சந்திப்புகள்இ, உவமைகள் மற்றும் குணப்படுத்துதல் போன்ற பலவற்றை அவர் விவரித்தார்.


வாராந்திர பொதுக் கூட்டத்திற்காக புனித பேதுரு  சதுக்கத்தில் கூடியிருந்த விசுவாசிகளிடம் உரையாற்றிய திருத்தந்தை "இந்த நேரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும்போது குணப்படுத்துதலும் தேவை" என்று குறிப்பிட்டு, அனைவரின் கவனத்தையும் நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தார்.

இன்றைய உலகம் "வன்முறை மற்றும் வெறுப்பு நிறைந்த சூழலால்" குறிக்கப்படுவதாக திருத்தந்தை விவரித்தார். இது மனித கண்ணியத்தை ஆழமாக காயப்படுத்துகிறது. நமது சமூகம், தனிமைப்படுத்தலால் அல்ல, மாறாக ஒரு வகையான சுமையால் நோய்வாய்ப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். "நாம் ஒருவருடன் ஒருவர் எப்போதும், எல்லா வழிகளிலும் இணைந்திருக்கும் நிலையிலுள்ளோம்; இது ஒரு அதிதிகமான தொடர்பு நிலை. நாம் ஒருவருடன் ஒருவர் எப்போதும், எல்லா வழிகளிலும் இணைந்திருக்கும் நிலையிலுள்ளோம்; இது ஒரு அதிதிகமான தொடர்பு நிலை."என்று அவர் கூறினார். "சில நேரங்களில் தவறான அல்லது சிதைந்த படங்களால் தாக்கப்படுகிறார்கள்." சமூக ஊடகங்கள், ஒரு வகையான உணர்ச்சிபூர்வமான ' வெறுமையை  உருவாக்கியுள்ளன. அங்கு அதிகப்படியான உள்ளீடு நம்மை சோர்வடையச் செய்து குழப்பமடையச் செய்கிறது என்று அவர் எச்சரித்தார்.

இதற்கு நடுவில், பலர் அமைதியாக இருக்க ஆசைப்படுகிறார்கள் என்று திருத்தந்தை தொடர்ந்தார். "நாம் எதையும் உணர விரும்பாமல் இருக்கலாம்" என்று அவர் கூறினார். 
 

திருஅவை அனைவரோடும் சேர்ந்து பயணிப்பது
இதைக் கருத்தில் கொண்டு, திருத்தந்தை  காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஒரு மனிதனின் குணப்படுத்துதலை விவரிக்கும் மாற்கு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட வாசிப்பைப் பிரதிபலித்தார். அந்த மனிதன் தானாக முன் வந்து  குணமடைவதை தேடுவதில்லை; அவன் மற்றவர்களால் இயேசுவிடம் கொண்டு வரப்படுகிறான். இந்த உருவங்களை, குறிப்பாக அவர்கள் குரல் அல்லது கேட்கும் திறனை இழந்திருக்கும்போது, மற்றவர் அவரை அழைத்து வருவது திருஅவையும் நாமும் அவர்களுடன்  இருக்கிறோம் என்பதற்கான  உருவமாகக் காணலாம் என்று திருத்தந்தை கூறினார்.

இயேசுவைச் சந்தித்த பிறகு, அந்த மனிதன் மீண்டும் பேசத் தொடங்குகிறான்; இந்த விவரம், ஒரு ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறது என்று திருத்தந்தை லியோ கூறினார். ஒருவேளை அவர் பேசத் தெரியாததாலோ அல்லது போதுமானதாக உணராததாலோ அமைதியாக இருந்திருக்கலாம். தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக உணருவதால் நாம் எத்தனை முறை பேசுவதை நிறுத்துகிறோம் என்று திருத்தந்தை கேட்டார்.

தனது உரையை நிறைவு செய்த திருத்தந்தை, உண்மையான தொடர்பு என்பது திறம்பட இருப்பது மட்டுமல்ல, மாறாக அது குணப்படுத்துவது. நம் வார்த்தைகளால் மற்றவர்களைப் புண்படுத்தாமல் இருப்பது பற்றியது என்பதை நமக்கு நினைவூட்டினார். "சரியாகப் பேசுவது ஒரு பயணத்தின் ஆரம்பம்" என்று அவர் கூறினார். மேலும் இந்தப் பயணம் நம்மை இயேசுவிடம், அவரது பாடு மற்றும் சிலுவை மூலம் அழைத்துச் செல்கிறது.

"நமது தொடர்பு கொள்ளும் முறையை குணப்படுத்தவும், ஒவ்வொரு நபரும் அவருடைய வார்த்தையைக் கேட்கவும், குணமடையவும், அவருடைய இரட்சிப்பின் தூதராக மாறவும் திருஅவை ஒரு இடமாக இருக்க உதவவும் இறைவனிடம் கேட்போம்" என்று திருத்தந்தை முடித்தார்.