இளஞர்களின் யூபிலி திருப்பலி - இயேசு நமது நம்பிக்கை  - திருத்தந்தை லியோ XIV | Veritas Tamil

 "உங்கள் ஆன்மாவின் ஜன்னலை இயேசு மெதுவாகத் தட்டுகிறார்" 


இளஞர் திருப்பலியில் திருத்தந்தை இயேசு "உங்கள் ஆன்மாவின் ஜன்னலை இயேசு மெதுவாகத் தட்டுகிறார்" என்று கூறினார். டோர் வெர்கடாவில் இளஞர்களின் யூபிலிக்காக நிகழ்த்தப்பட்ட திருப்பலியின் போது, திருத்தந்தை லியோ XIV, இயேசு நமது நம்பிக்கை என்பதை இளஞர்களுக்கு நினைவூட்டுகிறார். மேலும் இயேசு உங்கள் ஆன்மாவின் ஜன்னலை "மெதுவாகத் தட்டும்போது முடிவில்லால வாழ்வுக்காக உங்கள் இதயங்களை திறந்திடுங்கள் என்று அவர்களை வலியுறுத்துகிறார்.


இயேசுவே நம் நம்பிக்கை, உங்கள் வாழ்நாள் முழுவதும் அவருடன் பயணம் செய்யுங்கள். அவர் உங்களை அறிவொளி பெறச் செய்வார். 

ஞாயிற்றுக்கிழமை காலை உரோமில் உள்ள டோர் வெர்கடாவில் இளஞர்களின் யூபிலிக்காக நிகழ்த்தப்பட்ட திருப்பலியின் போது திருத்தந்தை லியோ இதைத் தெரிவித்தார்.

இன்றைய வழிபாட்டில் இந்த பகுதி நேரடியாகக் குறிப்பிடப்படாவிட்டாலும், தனது மறையுரையில் உயிர்த்தெழுந்த ஆண்டவரை சந்தித்து  "நம் வாழ்க்கையை மாற்றி, நம் பாசங்கள், ஆசைகள் மற்றும் எண்ணங்களை ஒளிரச் செய்ய வேண்டும் என அழைப்புவிடுத்தார். 

இயேசு  நம் ஆன்மாவின் ஜன்னலைத் தட்டுகிறார்.
சபை உரையாளர்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம், இரண்டு சீடர்களைப் போலவே, நமது வரம்புகளின் அனுபவத்தையும், கடந்து செல்லும் எல்லாவற்றின் நிலையற்ற தன்மையையும் ஏற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

"எல்லாமே சாதாரணமாகவும் நிலையானதாகவும் எடுத்துக்கொள்ளப்படும் வாழ்க்கைக்காக நாம் படைக்கப்படவில்லை, மாறாக அன்பில் தன்னைத் தானாக அர்ப்பணிக்கும் வரமாக, தொடர்ந்து புதுப்பிக்கப்படும் ஒரு நிலைத்த வாழ்வுக்காகவே இது உள்ளது." இதனால்தான், எந்தவொரு படைப்பும் நமக்கு நிறைவைத்தர முடியாது, மாறாக எதுவும் அணைக்க முடியாத மேலான ஒன்றுக்காக நாம் படைக்கபட்டுள்ளோம் என்று அவர் கூறினார். 

"இதை அறிந்திருப்பதால், மலிவான போலிகளால் நம் இதயத்தை ஒருபோதும் ஏமார்ந்து போகச் செய்தல் கூடாது ஆனால் அதற்கு நாம் செவிகொடுக்க வேண்டும். 

இந்த தாகத்தை நாம் ஒரு படிக்கட்டு போன்று மாற்றுவோம். "வீட்டுக்கண்ணாடியில் எதையாவது பார்க்க குழந்தைகள் தம் கால்விரலின் நுனியில்  நின்பதை போன்று   நாம் கடவுளை பார்க்க வேணடும். அப்போது நாம் நம்மை எதிர்பார்த்து, நம் ஆன்மாவின் ஜன்னலை மெதுவாகத் தட்டும் நம் இறைவனை  நம்மில் காண்போம்." என்று திருத்தந்தை கூறினார்


புனித அகஸ்டினின் ஞானம்
"குறிப்பாக இளம் வயதிலேயே உங்கள் இதயங்களை அகலமாகத் திறந்து, அவரை உள்ளே அனுமதிக்கும் போது, நிறைவாழ்வை நோக்கிய இயேசுவுடனான பயணம்  நித்தியத்தை நோக்கி அவருடன் இந்தப் பயணத்தைத் தொடங்குவது உண்மையிலேயே அழகானது" என்று திருத்தந்தை கூறினார்.


கடவுளைத் தேடுவதில் தான் கொண்டிருந்த தீவிர முயற்சியைப் பற்றி நினைவு கூர்ந்த புனித அகஸ்டீன், தன்னைத்தானே இவ்வாறு கேட்டுக் கொண்டார்:  நமது நம்பிக்கையின் நோக்கம் என்ன ?

நமது நம்பிக்கையின் ஆதாரம் பூமியா அல்லது அதிலிருந்து வரும் அழகான ஒன்றா என்று கேட்டபோது, பொருட்கள்  அல்ல மாறாக அவற்றைப் படைத்தவர்' 'அவரே உங்கள் நம்பிக்கை' என்று அவர் வாதிட்டார்.

தன்னுடைய பயணத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை லியோ, இளைஞர்களிடம் கூறும்போதுஇ புனித  அகுஸ்தினாரின் செபத்தை  நினைவுபடுத்தினார்:

"ஆண்டவரே நீர் என்னுள் இருந்தீர், ஆனால் நான் வெளியிலிருந்தேன். அங்கேயே நான் உம்மைத்தேடினேன்.  நீர் என்னை அழைத்தீர், முழங்கினீர், என் செவிடுத்தன்மையை உடைத்து விட்டீர்." என்று கூறினார்.
அகுஸ்தினாரின் இத்தகைய தேடலை  இளஞர்களும்  சில சமயங்களில் இதே போன்ற கேள்விகளைக் கேட்கவேண்டுமென வலியுறுத்தினார்.  

"நம் இதயங்களில்  பற்றிஎரியும் ஒரு கேள்வி உள்ளது. நாம் புறக்கணிக்க முடியாத உண்மைக்கான தேவை. இது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வழிவகுக்கிறது: உண்மையான மகிழ்ச்சி என்றால் என்ன? வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்ன? அர்த்தமின்மை, சலிப்பு மற்றும் சாதாரணத்தன்மையில் சிக்கிக் கொள்வதிலிருந்து நம்மை எது விடுவிக்க முடியும்?" என்று திருத்தந்தை ஒப்புக்கொண்டார்.

சமீபத்திய நாட்களில், இளைஞர்கள் பல அழகான அனுபவங்களைப் பெற்றிருப்பதை நினைவு கூர்ந்த திருத்தந்தை, இவை அனைத்தின் மூலமும், நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்று கூறினார். அதாவதுஇ நமது இருப்பின் முழுமை நாம் எதைச் சேமித்து வைக்கிறோம் அல்லது நற்செய்தியில் கேள்விப்பட்டபடி, நம்மிடம் உள்ளதைப் பொறுத்தது அல்ல. 

மாறாக, முழுமை என்பது நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்பதிலும்  மற்றும் பகிர்ந்து கொள்ளும் விஷயங்களுடன் தொடர்புடையது என்று அவர் நினைவுபடுத்தினார். "வாங்குவதை  பதுக்கி வைப்பதிலும் மற்றும் உட்கொள்வதிலும்  மட்டும் போதாது, நாம், நம் கண்களை உயர்த்தி மேல்நோக்கிப் பார்க்க வேண்டும். 'மேலே உள்ளவைகளை...' நோக்கி."

மேலும் இயேசுவே எங்கள் நம்பிக்கை
"அன்பான இளஞர்களே, இயேசுவே எங்கள் நம்பிக்கை" என்று  வலியுறுத்தினார்.
 புனித இரண்டாம் ஜான் பால் 2000 ஆண்டு யூபிலி விழாவின் போது அதே இடத்தில் இளைஞர்களுக்கு உரையாற்றியதை  நினைவு கூர்ந்தார். "உங்கள் வாழ்க்கையில் சிறப்பான ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை உங்களில் தூண்டுபவர் உங்களையும் சமூகத்தையும் மேம்படுத்துவதற்கும், உலகத்தை மேலும் மனிதாபிமானமாகவும் சகோதரத்துவமாகவும் மாற்றுவதற்கும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்."

எனவே "நாம் அவரோடு ஒன்றித்திருப்போம். அவருடைய நட்பில் நிலைத்திருப்போம். அதை எப்போதும் ஜெபம், வழிபாடு, நற்கருணை, ஒற்றுமை, அடிக்கடி பாவமன்னிப்பு மற்றும் தாராளமான தொண்டு மூலம் வளர்ப்போம். விரைவில் புனிதர்களாக அறிவிக்கப்படவுள்ள ஆசீர்வதிக்கப்பட்ட பியர்ஜியோர்ஜியோ ஃப்ராசாட்டி மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட கார்லோ அகுடிஸ் ஆகியோரின் முன்மாதிரிகளைப் பின்பற்றுவோம்" என்று அறிவுறுத்தினார். 

"நீங்கள் எங்கிருந்தாலும், பெரிய காரியங்களையும் புனிதத்தையும்  விரும்புங்கள். குறைவாக இருப்பதில் திருப்தி அடையாதீர்கள். அப்போது, உங்களிடமும் உங்களைச் சுற்றியும் ஒவ்வொரு நாளும் நற்செய்தியின் ஒளி வளர்வதைக் காண்பீர்கள்."

இறுதியாக, இளைஞர்களை மரியன்னையிடம்   ஒப்படைத்த பிறகு, திருத்தந்தை  லியோ அவர்கள் வீடு திரும்பும்போது, "இயேசுவின்  அடிச்சுவடுகளில் மகிழ்ச்சியுடன் தொடர்ந்து நடக்கவும், உங்கள் உற்சாகத்தையும் உங்கள் விசுவாசத்தின் சாட்சியையும் நீங்கள் சந்திக்கும் அனைவருக்கும் பரப்புங்கள் என்ற கூறி  ஆசீரளித்து நிறைவுசெய்தார்.