சென்னையில் ‘இயேசு என்னை ஆடச் செய்கிறார்’ என்ற இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு | Veritas tamil

இறைநம்பிக்கை, இசை மற்றும் நற்கருணைக் கொண்டாட்டம் நிறைந்த ஓர் இனிய மாலைப்பொழுது

சென்னையின் பெரம்பூர் பகுதியில் அமைந்துள்ள லூர்து அன்னை திருத்தலத்தில், அக்டோபர் 31ஆம் தேதி சனிக்கிழமை, ‘இயேசு என்னை ஆடச் செய்கிறார்’ (Jesus Makes Me Dance – Live in Concert) என்ற தலைப்பில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இறைநம்பிக்கையாளர்கள் பங்கேற்றனர். புகழ்ச்சிப் பாடல்கள், இறைவேண்டல், இசை மற்றும் நற்கருணைக் கொண்டாட்டம் என அமைந்த இந்நிகழ்வு, இளையோர், குடும்பங்கள் மற்றும் கத்தோலிக்க சமூகத்தினரை ஒருங்கிணைக்கும் இறைநம்பிக்கையின் மகிழ்ச்சிமிகு வெளிப்பாடாக அமைந்தது.

சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் இளையோர் பணிக்குழு மற்றும் சமூகத் தொடர்புப் பணிக்குழு ஆகியவை இணைந்து, பெரம்பூர் தூய லூர்து அன்னை திருத்தலம் மற்றும் ‘ஃபார்கிவன் மினிஸ்ட்ரீஸ்’ (Forgiven Ministries) அமைப்பின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

நிகழ்வு நடைபெற்ற பங்கு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பங்குகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர்; மேலும், பெங்களூரு மற்றும் திருச்சிராப்பள்ளியிலிருந்தும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்தனர். நூற்றுக்கணக்கான கத்தோலிக்க இணையதளச் செல்வாக்காளர்கள் (Catholic influencers) இந்நிகழ்வில் பங்கேற்றது, விசுவாசம், தோழமை மற்றும் கத்தோலிக்கச் சமூக ஈடுபாட்டிற்கான ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.

மாலை 5:30 மணியளவில், எரிக் நோரோன்ஹா (Eric Noronha) அவர்களின் தலைமையிலான Forgiven Ministries குழுவினரின் எழுச்சிமிகு துதி ஆராதனை வழிபாட்டுடன் (Praise and Worship) கொண்டாட்டங்கள் தொடங்கின. இசை மற்றும் ஜெபத்தின் வழியாக மக்களை ஒன்றிணைத்த இக்குழுவினர், அன்றைய மாலை நிகழ்வுகளுக்கான மகிழ்ச்சியையும் பேரார்வத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, மாலை 6:30 மணியளவில் அருள்பணி ரிச்சி வின்சென்ட் அவர்களின் தலைமையில் ஆங்கிலம்-தமிழ் இருமொழிச் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இத்திருப்பலி நிகழ்வு மாலையின் ஆன்மிகச் சிறப்புமிக்க தருணங்களில் ஒன்றாக அமைந்தது. அருள்பணி ரிச்சி வின்சென்ட் அவர்கள் தலைமையேற்று நடத்திய திருவழிபாடு, பங்கேற்பாளர்களின் உள்ளங்களை ஆழமாகத் தொட்டது. திருப்பலிக்குப் பின்னர் பலர் நேரடியாக வந்து, அதன் அழகையும் இறைவேண்டல் நிறைந்த தன்மையையும் பாராட்டினர். இத்திருவழிபாடு தங்களுக்கு ஆழமான இறையனுபவத்தை வழங்கியதாகவும் தெரிவித்தனர்.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அருள்பணி சந்தேஷ் மானுவல் OFM அவர்களின் இசை நிகழ்ச்சி, புனித கார்லோ அகுடிஸ் அவர்களின் முதலாம் நிலை திருப்பண்டத்துடன் நடைபெற்ற சிறப்பு ஊர்வலம் மற்றும் ஆசியுடன் தொடங்கியது. இச்சிறப்பு நிகழ்வு, கொண்டாட்டத்திற்கு ஆழமான ஆன்மிகப் பரிமாணத்தை அளித்தது. அதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் பாடல்கள் பாடியும் நடனமாடியும் இறைவனைப் புகழ்ந்ததன் வழியாக, நிகழ்வின் சூழல் உற்சாகமிக்க கொண்டாட்டமாக மாறியது.

இசை நிகழ்ச்சி முழுவதும், அருள்பணி சந்தேஷ் அவர்கள் தனது பாடல்கள் மற்றும் பார்வையாளர்களுடனான உரையாடல்கள் வழியாகப் புனிதர்களின் வாழ்வு குறித்த ஊக்கமளிக்கும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, 2026-ஆம் ஆண்டில் திருஅவை புனித அசிசி பிரான்சிஸ் அவர்களின் 'விண்ணகப் பிறப்பின்' (Dies Natalis) 800-வது ஆண்டினை நினைவுகூரும் இத்தருணத்தில், அவரது வாழ்வு குறித்து அவர் விவரித்துப் பேசினார். மேலும், பதுவை புனித அந்தோனியார் மற்றும் புனித கார்லோ அக்குத்தீஸ் ஆகியோரின் ஆன்மீக வாழ்வை எடுத்துரைத்த அவர், அவர்களது விசுவாச சான்று இன்றைய இளையோரின் அன்றாட வாழ்வோடு எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்ச்சியை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில், மறைமாவட்ட இளையோர் பணிக்குழுவினர் ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்ற சிறப்பு நடன அசைவுகளைத் தயாரித்திருந்தனர். அவர்கள் மேடையில் அருள்பணி சந்தேஷ் அவர்களுடன் இணைந்து, பாடல்களின் முக்கிய நடன அசைவுகளைப் பங்கேற்பாளர்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். இதனால் பார்வையாளர்களும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாறி, அனைவரும் இணைந்து பாடியும் ஆடியும் மகிழ்ந்தனர்.

மாலையின் தனித்துவமான சிறப்பம்சங்களில் ஒன்றாக, மரியாஞ்சலி கலைக்கூடம் நடனப் பள்ளியின் நிறுவனர்கள் வழங்கிய பரதநாட்டிய ஜுகல்பந்தி நிகழ்ச்சி அமைந்தது. இந்தியாவின் பாரம்பரிய செவ்வியல் நடனத்தையும் சமகால கிறிஸ்தவ இசையையும் இணைத்த இந்நிகழ்ச்சி, கிறிஸ்தவ நம்பிக்கையைப் பண்பாட்டு கலை வடிவங்கள் வழியாக வெளிப்படுத்த முடியும் என்பதை எடுத்துக்காட்டியது.

மேலும், அருள்பணி சந்தேஷ் மானுவல் OFM அவர்கள் உருவாக்கிய புனித கார்லோ அகுடிஸ் பற்றிய ராப் இசைப்பாடலும் நிகழ்ச்சியில் இடம்பெற்றது. நவீன இசையையும் இளம் புனிதரின் நம்பிக்கை வாழ்வையும் இணைத்த இப்பாடல், குறிப்பாக இளையோரின் கவனத்தை ஈர்த்தது.

தனது இசை, உற்சாகம் மற்றும் நம்பிக்கை நிறைந்த செய்தி வழியாக, குறிப்பாக இளையோர் கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் உள்ள மகிழ்ச்சியை அனுபவிக்கவும், இசையின் வழியாகத் தங்கள் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தவும் அருள்பணி சந்தேஷ் அழைப்பு விடுத்தார். அவரது பாடல்களுக்கும் செய்திக்கும் ஆயிரக்கணக்கானோர் உற்சாகத்துடன் பங்கேற்றதால், திருத்தல வளாகம் மகிழ்ச்சியும் இறைநம்பிக்கையும் நிறைந்த இடமாகத் திகழ்ந்தது.

பல பங்கேற்பாளர்களுக்கு இந்நிகழ்வு ஒரு சாதாரண இசை நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், ஆழமான ஆன்மிக அனுபவமாகவும் அமைந்தது. சமகால கிறிஸ்தவ இசை, பக்தி, பண்பாடு மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் தனித்துவமான ஒருங்கிணைப்பை அவர்கள் பாராட்டினர்.

இந்நிகழ்வின் போது, மனித உயிரின் மாண்பு மற்றும் மதிப்பை எடுத்துரைக்கும் வகையில், உயிர்ப் பாதுகாப்பு விழிப்புணர்வு அரங்கும் (Pro-Life Awareness Stall) அமைக்கப்பட்டிருந்தது. இதனைப் பலர் பார்வையிட்டு, மனித உயிரின் மாண்பு மற்றும் மதிப்பு குறித்த விழிப்புணர்வைப் பெற்றனர். நம்பிக்கையின் அடிப்படையில் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் முயற்சியாக இந்த அரங்கு அமைந்தது.

இறுதியாக, பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலத்தின் அதிபரும் பங்குத்தந்தையுமான அருள்பணி ஸ்தனிஸ்லாஸ் சுவாமிக்கண்ணு SDB அவர்கள் தலைமையில் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. இதன் மூலம், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட இறைவேண்டலுடன் மாலைநேரக் கொண்டாட்டங்கள் நிறைவடைந்தன.

நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்த பின்னரும், திருத்தல வளாகத்தில் பங்கேற்பாளர்களின் சந்திப்புகளும் உரையாடல்களும் தொடர்ந்து நடைபெற்றன. பலர் அருள்பணியாளர்களைச் சந்தித்து, தங்களது அனுபவங்களையும் சாட்சியங்களையும் பகிர்ந்துகொண்டனர். மேலும், அருள்பணி சந்தேஷ் மானுவல், அருள்பணி ரிச்சி வின்சென்ட், அருள்பணி ஸ்தனிஸ்லாஸ் சுவாமிக்கண்ணு மற்றும் அருள்பணி மரிய பிரேம் அன்பரசன் ஆகியோருடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவில், சென்னையில் இவ்விசை நிகழ்ச்சியை நடத்துவதற்கான முயற்சிகளையும் ஏற்பாடுகளையும் மேற்கொண்ட அபிஷேக் ஜோசப் மற்றும் அருள்பணி ரிச்சி வின்சென்ட் ஆகியோருக்கு அருள்பணி சந்தேஷ் மானுவல் OFM அவர்கள் நன்றியைத் தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய அளவிலான கொண்டாட்டத்தை நடத்துவதற்குத் திருத்தலத்தை வழங்கி, ஆதரவும் ஊக்கமும் விருந்தோம்பலும் அளித்த அருள்பணி ஸ்தனிஸ்லாஸ் சுவாமிக்கண்ணு SDB அவர்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

தொடர்ந்து, இந்நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அருள்பணி மரிய பிரேம் அன்பரசன், சமூகத் தொடர்புப் பணிக்குழு, எரிக் நோரோன்ஹா தலைமையிலான forgiven Ministries அமைப்பினர், மரியாஞ்சலி கலைக்கூட நடனக் கலைஞர்கள், துறவறத்தார் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு பங்குகளிலிருந்தும் நகரங்களிலிருந்தும் பெருந்திரளானோர் பங்கேற்றது, குறிப்பாக இளையோர், படைப்பாற்றல் மிக்க வழிகளில் திருஅவையுடன் இணைந்து தங்கள் இறைநம்பிக்கையை வெளிப்படுத்துவதில் கொண்டுள்ள ஆர்வத்தை எடுத்துக்காட்டியது. நூற்றுக்கணக்கான கத்தோலிக்க எண்ணிம உள்ளடக்கப் படைப்பாளர்களின் பங்கேற்பு, நற்செய்தியை எண்ணிம ஊடகங்கள் வழியாக அறிவிப்பதிலும், கத்தோலிக்க ஊடகங்கள் சமூகங்களை ஒன்றிணைப்பதிலும் கொண்டுள்ள முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியது.

புகழ்ச்சிப் பாடல்கள் மற்றும் இறைவேண்டல், மனதைத் தொட்ட திருப்பலி, புனித கார்லோ அகுடிஸ் அவர்களின் திருப்பண்டத்துடன் வழங்கப்பட்ட ஆசி, உற்சாகமிக்க நேரடி இசை நிகழ்ச்சி, பண்பாட்டு கலை வெளிப்பாடுகள் மற்றும் நற்கருணை ஆசீர் என மாலையின் ஒவ்வொரு நிகழ்வும் கிறிஸ்துவை மையமாகக் கொண்டிருக்கும்போது, இசையும் கொண்டாட்டமும் இறைநம்பிக்கையின் வலிமையான வெளிப்பாடுகளாக மாற முடியும் என்பதை உணர்த்தின.

‘இயேசு என்னை ஆடச் செய்கிறார்’ என்பது வெறும் இசை நிகழ்ச்சி மட்டுமல்ல; மகிழ்ச்சியும் உற்சாகமும் ஒற்றுமையும் நிறைந்த திருஅவையின் கொண்டாட்டமாக அமைந்தது. ஆயிரக்கணக்கானோர் இறைவனைப் புகழ்ந்து பாடிய அந்த மாலையில், இயேசு ஒருவரின் இதயத்தைத் தொடும்போது, அந்த இதயம் மகிழ்ச்சியில் ஆடாமல் இருக்க முடியாது என்ற செய்தி அனைவரின் உள்ளங்களிலும் எதிரொலித்தது.

Tamil Survey Popup Image