கர்தினால்கள் டாக்ளே மற்றும் அம்போவின் நம்பிக்கைக்கான அழைப்பு ! | Veritas Tamil

எதிர்நோக்கின் திருப்பயணிகள் மூன்றாம் நாளில் “எதிர்காலத்தை நினைவில் கொள்ளுங்கள்”, “மனித இயேசுவை மறுபடியும் கண்டுபிடியுங்கள்” என்று ஆசியாவுக்கு அழைப்பு விடுக்கும் கர்தினால்கள் டாக்ளே மற்றும் அம்போ

பெனாங்கில் நடைபெற்று வரும் எதிர்நோக்கின் திருப்பயணத்தில்  ஆயிரக்கணக்கான பேர் முன்னேறிக் கொண்டிருக்கையில், ஆசியாவின் மிகப் பெரிய தேவாலயத் தலைவர்களில் இருவர் — கர்தினால்கள்  லூயிஸ் ஆண்டோனியோ டாக்ளே மற்றும் கார்டினல் பாப்லோ விர்ஜிலியோ “அம்போ” டேவிட் — 2033 ஜூபிலியை முன்னிட்டு ஆசியாவுக்கான ஆழமான அழைப்பை முன்வைத்தனர்.
அவர்கள் நம்பிக்கையை ஆழப்படுத்தவும், இயேசுவின் மனிதத் தன்மையை மீண்டும் கண்டுபிடிக்கவும், நமது சொந்த வாழ்க்கைக் கதைகள் நம்பிக்கையின் மர்மத்தை பிரதிபலிக்கவும் அழைத்தனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பு நவம்பர் 29 அன்று பெனாங்கு மறைமாவட்டத்தின் சமூகத் தொடர்பு அலுவலகத் தலைவர் டேனியல் ராய் தலைமையில் நடைபெற்றது. ஆசியா எப்படி ஜூபிலி நோக்கி செல்கிறது என்பதை அறிய உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் இதில் கலந்து கொண்டன.

“எதிர்காலத்தை நினைவில் கொள்ளுங்கள்”: கர்தினால்கள்  டாக்ளே மற்றும் அம்போவின்  நம்பிக்கைக்கான அழைப்பு“2033 மகா ஜூபிலியின் சூழலில், ஆசியாவிற்கு உங்களது செய்தி என்ன?” என்ற கேள்விக்கு, கார்டினல் டாக்ளே திருவிழாவின் மையமான திருவிருந்து அனுபவத்தைச் சுட்டிக்காட்டினார்.

திருப்பலியில் நாம் சொல்லும் நம்பிக்கையின் மர்மம்:
“கிறிஸ்து இறந்தார், கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், கிறிஸ்து மீண்டும் வருவார்.”இந்த வார்த்தைகள் வெறும் வழிபாட்டு உரையாக இல்லாமல், நம் வாழ்வின் கதைகளாக மாற வேண்டும் என அவர் கூறினார்.

“2033 இந்த அறிவிப்புக்கு உயிரும் ஆழமும் சேர்க்கும் நேரமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.
“நாம் திருப்பலியில் அதை அறிவிக்கிறோம்; ஆனால் அது நமது வாழ்க்கையின் கதைகளாக மாற வேண்டும்.”

கார்டினல் டாக்ளே மற்றும் கார்டினல் அம்போ ஆகியோரின் சிந்தனைகள் ஆசியாவுக்கான ஒரே அழைப்பாக இணைகின்றன:

  •  உயிர்த்தெழுதலால் உறுதிசெய்யப்பட்ட எதிர்காலத்தை நினைவில் கொள்ளுங்கள் — அதுவே நம்பிக்கை.
  • இறைத்தன்மை  மனிதத்தன்மையில் வெளிப்படுகிறது — இயேசுவின் மனித வடிவத்தை மீண்டும் காணுங்கள்.
  •  நம் வாழ்க்கைக் கதைகள் நம்பிக்கைக்கான சாட்சி ஆகட்டும்.

இறுதியாக பெனாங்கில் GPH பயணம் முன்னேறிக் கொண்டிருக்கும் போது, ஜூபிலி என்பது வெறும் காலண்டரில் ஒரு தேதி அல்ல என்பதை அனைவருக்கும் நினைவூட்டுகிறது.அது ஒரு ஆவிக்குரிய பயணம், இயேசுவுடன் நடந்து செல்லும் ஒரு அழைப்பு, கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் நம்பிக்கையில் தாங்கும் ஒரு செயலக அமைகிறது.