கல்வியாளர்களின் பணி உண்மையான கருணைமிகு பணி'-திருத்தந்தை லியோ அறிவுறுத்தல்! | Veritas Tamil
கல்வியாளர்களின் பணி உண்மையான கருணைமிகு பணி'
-திருத்தந்தை லியோ அறிவுறுத்தல்!
வத்திக்கான், அக் 30: வத்திக்கானில், பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்புத் திருப்பலியைத் திருத்தந்தை லியோ நிறைவேற்றினார். அப்போது கல்வி குறித்தும், கற்பித்தல் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்த அவர், கற்பித்தல் என்பது நற்செய்தியில் இருக்கும் அதிசயத்தைப் போன்றது எனவும், அது ஒருவரை உயர்த்துமே தவிர வீழ்த்தாது எனவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், நவீன உலகில், அன்றாட எதார்த்தத்தின் மிகச்சிறிய விவரங்களை அறியும் வல்லுநர்களாக மனிதகுலம் மாறிவிட்டாலும், ஒரு பொருளைப் பற்றிய அறிவையும் அதன் உண்மையான அர்த்தத்தையும் இணைக்கும் ஒட்டுமொத்த பார்வையை மீட்டெடுக்க அது தொடர்ந்து போராடுகிறது. ஆகவே, பிரிவினைகளுக்குப் பதிலாக, அறிவுக்கும் ஆன்மிகத்திற்கும் இடையிலான நல்லிணக்கத்தை இறையியல் வல்லுநர்கள் அகஸ்டின்,
தாமஸ் அக்குவினாஸ், அவிலாவின் தெரசா மற்றும் எடித் ஸ்டீன் போன்று, இன்றைய சூழலிலும் மீண்டும் கண்டறியவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு சுருக்கமான அறிவுசார் பயிற்சியாக இது அமைந்து விடாமல், வாழ்க்கையை மாற்றும், நம்பிக்கையை ஆழப்படுத்தும், நற்செய்திக்குச் சாட்சியமளிக்கும் ஒரு சக்தியாக அது மாறுவதை உறுதிசெய்யவேண்டும் என்றார். கல்வியாளர்களின் பணியை உண்மையான கருணைமிகு பணியாக விவரித்த திருத்தந்தை லியோ, கற்பித்தலும், கல்வியாளரின் செயல்பாடுகளும் மக்களை உயர்த்துவதாகவும், அவர்கள் தாங்களாகவே மாற உதவுவதாகவும், தகவலறிந்த மனசாட்சியையும் விமர்சன சிந்தனைத் திறனையும் வளர்க்க உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
உண்மைக்கான வலியைத் தேடுவதென்பது. வெறும் கல்விக் கடமை மட்டுமல்ல; மாறாக, ஒரு முக்கியமான மனிதப் பணியாகும் என்று அவர் தெரிவித்தார். உண்மைக்கான தேடல் அறிவை மட்டுமல்ல, சொந்தத்தையும் வெளிப்படுத்துகிறது. என்ற திருத்தந்தை, படிப்பு மற்றும் ஆராய்ச்சியில், ஒவ்வொரு நபரும் அனைத்தின் ஆழமான உண்மையை மீண்டும் கண்டுபிடிக்க முடியும்; நாம் தனியாக இல்லை; மாறாக, நம் வாழ்க்கைக்கு ஒரு திட்டத்தைக் கொண்டுள்ள ஓர் அன்பான தந்தைக்குச் சொந்தமானவர்கள், என்றார், மேலும், கல்வியில் ஈடுபட்டுள்ள அனைவரும் "தங்களை ஒருபோதும் வளைக்காமல் எப்போதும் நேர்மையானவர்களாக" இருக்கவேண்டும் என்றும், "நீங்கள் எங்குச் சென்றாலும் நற்செய்தியின் மகிழ்ச்சியையும் ஆறுதலையும்" மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.