உலகெங்கிலும் உள்ள ஏனைய ஆயர் பேரவைகளின் உள்ளொளிகளைப் (insights) பயன்படுத்தி, ஒன்றிணைந்த பயணத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த விரிவான பயிற்சி மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளின் அவசியத்தை கர்தினால் ஃபெரோ அவர்கள் தனது உரையில் வலியுறுத்தினார்.
திருமுழுக்கின் வழியாக பாவங்கள் கழுவப்பட்டு, ஆண்டவரின் அன்பு மக்களாக மாறுகின்ற நாம் ஒவ்வொருவரும், இயேசுவின் – இறையாட்சியின் - மதிப்பீடுகளின்படி வாழவேண்டும் என்பதுதான் இந்த நாள் நமக்குத் தருகின்ற மேலான அழைப்பாக இருக்கின்றது.
‘அடுத்திருப்பவரை அன்பு செய்யாமல், கடவுளை அன்பு செய்கிறேன்’ என்று நாளும் பொழுதும் முழங்குபவர் ஒரு பொய்யர் என்று யோவான் குறிப்பட்டுள்ளதை மனதில் கொள்ள வேண்டும்.
உலகமும் மனுக்குலமும் தோற்றுவிக்கப்பட நாள் முதல், கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. அப்படியிருக்க, கடவுள் அவரது ஆவியை நமக்கு அருளியதால் நாம் அவரோடு இணைந்திருக்கிறோம்
பாவம் செய்து வாழ்பவர்கள் அலகையைச் சார்ந்தவர் என்கிறார். நாம் கடவுளிடமிருந்து வந்தவர்களாயின் கடவுளின் திருவுளத்திற்கு எற்ப வாழ வேண்டும் என்பதை யோவான் வலியுறுத்துகிறார்