விதிவிலக்கு | அருள்பணி. ஜெயசீலன் | VeritasTamil
விதிவிலக்குகள் இயல்புகளாக மாறும்போது ஆண்டு விதிகளின் வீரியம் குறையும் அதன் மதிப்பு மடியும். விதிகளுக்கு மதிப்பு இல்லை என்றால் சமூகத்தின் மாண்பு மறையும் கூட்டுவாழ்வு தனி வாழ்வாக மாறும் ஒழுக்கம் ஓரங்கட்டப்படும். ஒழுக்கம் இல்லாத சமூதாயம் அழிவின் வாசலில் நிற்கும். ஆக விதிவிலக்கு ஒருவனை கோழையாக்கும் அவனின் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் அவனின் அசல் இயல்புக்கு இரங்கல் செய்தியாகும். விதிவிலக்குகள் இல்லாத வாழ்க்கை கனவுதான் ஆனால் விதிவிலக்குகளே நாமாகும்போது நமது வாழ்க்கை பகல் கனவுதான்!
- அருள்பணி. ஜெயசீலன் சவரியார்பிச்சை ச.ச.
குரல்: ஜூடிட் லூக்காஸ்
(இந்தப்பதிவு 'குவனெல்லிய சபை' நடத்தும் 'அன்பின் சுவடுகள்' என்ற மாத இதழிலிருந்து எடுக்கப்பட்டது.)