நிறைவாக, பாறையின் மீது கட்டப்பட்ட வீடு போல நமது வாழ்க்கையையும் கிறிஸ்துவின் மீது கட்டுவோம். உலகம் மாறலாம்; சூழ்நிலைகள் மாறலாம்; சோதனைகள் வரலாம். ஆனால் கிறிஸ்துவின் மீது கட்டப்பட்ட வாழ்க்கை உறுதியாக நிற்கும்.
“‘இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக’"என்பது முதன்மையான கட்டளை.