பற்றிக்கொள்தல் என்றால் என்ன? நாம் அன்பு செய்பவர்களை இறுக்கி அனைத்துக்கொள்வதா? கைகளை கோர்த்துக்கொண்டு நடப்பதா? பிடித்த பிடியை விடாமல் இருப்பதா? இருக்கலாம்.
"கடமையைச் செய் ; பலனை எதிர்பாராதே " என்கிறது பகவத்கீதை. நம்முடைய அன்றாட வாழ்வில் நம்முடைய கடமைகளைச் சரிவரச் செய்து நம் வாழ்வைச் சிறப்பாக வாழ்ந்திட இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
கிறிஸ்துவின் மனநிலை என்ன? தாழ்ச்சியும், கீழ்படிதலும். தான் கடவுளின் மகன் என்றாலும் தன்னுடைய நிலையை பற்றிக்கொண்டு இருக்கவில்லை கிறிஸ்து. மாறாக தந்தையின் பணியாளனாக உலகிற்கு வந்தார் அவர்.