புனித அசிசி பிரான்சிஸ் விண்ணகப் பிறப்பின் 800 வது | அருள்பணி அ.ஜோ. மாத்யூ, OFM Cap | Veritas Tamil
புனித அசிசி பிரான்சிஸ் விண்ணகப் பிறப்பின் - 800 வது யூபிலி ஆண்டு
இந்த யூபிலி ஆண்டு, புனித பிரான்சிஸ் 800 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிவைத்த நற்செய் தியின் உருமாற்றும் ஆற்றலை மீண்டும் கண்டறிய, மீண்டும் உள்வாங்கி நற்செய்தியை வாழ் வாக்கும் மக்களாக உருமாற நமக்கு அழைப்பு விடுக்கிறது.
இன்றும் பிரான்சிஸ் நம் காயப்பட்ட சமுதாயத்தோடு பேசுகிறார். அரசியல் அதிகாரத்தின் மூலமாகவோ அல்லது உலகின் செல்வாக்கு மூலமாகவோ அல்ல; மாறாக, தாழ்ச்சி, எளிமை, சகோதரத்துவம் மற்றும் அமைதியின் வழியாகப் பேசுகிறார். போர்களும் பிளவுகளும் பயமும் நிறைந்த இன்றைய உலகிற்கு பிரான்சிஸ் அவசரமாகத் தேவைப்படுகிறார்.
அவரது நற்செய்தி வாழ்வுப் பயணத்தின் தொடக்கத்தில் ஓர் ஆழமான, அழகான வெளிப் பாட்டைப் பெற்றார். 'ஆண்டவர் உங்களுக்கு அமை தியை அருள்வாராக!' என்று சகோதரர்கள் ஒருவர் ஒருவரை வாழ்த்த அறிவுரை கூறியதோடு மட்டு மல்லாமல், இந்த வாழ்த்தை ஆண்டவரே தனக்கு வெளிப்படுத்தியதாகவும் கூறுகிறார்.
பிரான்சிசைப் பொறுத்தவரை அமைதி என்பது ஒரு நாகரிகமான வாழ்த்து மட்டுமல்ல; அது உயிர்த்த கிறிஸ்துவின் பரிசு! இறைவனிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட அனைத்துமே அருள்கொடைகள் என்பது பிரான்சிசின் நம்பிக்கையாகும்.
இந்த அமைதி பலவீனமோ, செய லற்றத்தன்மையோ அல்லது மோதல்கள் இல்லாத நிலையோ அல்ல; இது கடவுள் நமக்குத் தரும் இதயத்தின் வலிமை யாகும். வன்முறைக்கு வன்முறையாலோ, வெறுப்பிற்கு வெறுப்பாலோ பதில் அளிப்பதில்லை. மற்றவர்கள் சுவர்களை எழுப்பும் இடங்களில் பாலங்களை அமைப்பதும், சந்தேகமும் பயமும் பரிசு வேரூன்றிய இடங்களில் உரையாடலின் பாலங்களைத் திறப்பதுமே அமைதியின் பாதையாகும். சமய மோதல்கள் நிறைந்த அவரின் காலத்தில் எகிப்தில் சுல்தானைச் சந்தித்த அவரது துணிச்சல் இன்றளவும் அமைதியின் பலம் வாய்ந்த அடையாளமாகத் திகழ்கிறது. இன்றைய உலகில் அமைதியைப் பரிசளிப்பவர்களாக வாழ நம்மை அழைக்கிறது.
சூரியனை 'சகோதரன்' என்றும், சந்திரனை 'சகோதரி' என்றும் அழைக்க பிரான்சிஸ் சொல்லிக் கொடுப்பதன் மூலம் படைப்புகளோடு நமக்கு இருக்கும் உறவு அமைதியின் உறவு என்கிறார். மனித குலத்தை ஒவ்வொரு படைப்புமே அமைதி யின் பிரதிபலிப்பாகப் பார்க்கவேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். மனிதர்களுக்கு இடையேயான அமைதி மற்றும் படைப்போடு இருக் கும் அமைதி யாவுமே அமைதியின் பரிமாணங்கள் என்றும் திருத்தந்தை லியோ நமக்கு நினை வூட்டுகிறார். எனவே, இந்த யூபிலி ஆண்டின் பரிசான அமைதி நம்மைப் பொறுப்புள்ளவர்களாக வாழ அழைக்கிறது. உலகம் அமைதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில், புனித பிரான்சிஸ்
நம்மை மீண்டும் மீண்டும் அமைதியின் கருவிகளாக வாழ அழைக்கிறார். 'ஆண்டவர் உங்களுக்கு அமைதியை அருள்வாராக!' என்று பறைசாற்ற தந்தை பிரான்சிசோடு நாமும் பயணிப்போம்.
அருள்பணி அ.ஜோ. மாத்யூ, OFM Cap
