நேர்மை இதுவன்றோ ! | ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
நேர்மை என்பது நாம் செய்யும் செயலைப் பொறுத்தது அது நம் நல்ல எண்ணங்களிலிருந்து வெளிப்படுகிறது.டெல்லியில் டாக்சி ஒட்டிக்கொண்டிருந்தவர் தேவேந்திர கப்ரி ஒரு நாள் முபிஷர் வாணி என்பவர் விமான நிலையத்திலிருந்து இறங் பஹார்கஞ்ச் வரை இவரது டாக்சியில் பயணம் னம் செய்தார். அப்போது எட்டு இலட்சம் மதிப்புள்ள பொருள்கள் அடங்கிய ஒரு பையை டாக்சியிலேயே தவறவிட்டுச் சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து டாக்சியில் ஒரு பை இருப்பதைப் பார்த்த சுப்ரி விமான நிலையக் காவல்துறையை அணுகினார். அவர்களும் பணத்துக்கு உரியவரைக் கண்டறிந்துப் பணப்பையை அவரிடம் ஒப்படைத்தனர்.
தேவேந்திர கப்ரியின் குடும்பச் சூழலை அறிந்தபோது அவர் கடனில் இருந்தார். பிஹார் மாநிலம், பாங்கா பகுதியைச் சேர்ந்த இவர் தன் இரண்டு மகள்களையும் திருமணம் செய்துகொடுப்பதற்காக, 2008ஆம் ஆண்டு ஓர் இலட்சம் ரூபாயை மாதம் ஐந்து விழுக்காடு வட்டிக்குப் பெற்றிருந்தார். ஆனால், விவசாயியான இவர் வட்டியைக் கட்ட முடியாமல், டாக்சி ஒட்டி அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.
மாமனிதர்கள் தேவேந்திர கப்ரியின் நிலைமையை அறிந்த தனியார் வானொலி நிறுவனம் ஒன்று இவருக்கு நிதி திரட்டுவதற்காகப் பிரச்சாரம் மேற்கொண்டது. அதன் பயனாக ஒரு மணி நேரத்தில் எழுபதாயிரம் ரூபாய் கிடைத்தது.
இன்னும் ஓரிரு மணி நேரத்தில் ஓர் இலட்சம் ரூபாய் கிடைத்தது.
“பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்" என்று சொல்வார்கள். ஆனால், அதைப் பொய்யாக்கி வறுமையிலும் நேர்மையோடு வாழ்ந்த தேவேந்திர கப்ரி நாம் பின்பற்ற வேண்டிய நேர்மையான ஏழைத் தொழிலாளி.
நேர்மைக்கான பரிசு நிச்சயம் உண்டு. ஒருவேளை காலம் தாழ்த்தலாம். ஆனால், நேர்மையாளர்கள் தங்கள் செயலுக்கானப் பரிசினை அடையாமல் போகார்.