வியர்வை | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

சிந்தாமல் வெற்றிக் கனியைப் பறிக்க முடியாது. வெற்றி எப்போதும் வியர்வைத் துளிகளுக்குப் பின்னாலேயே ஒளிந்திருக்கின்றது!

இன்றைய வியர்வை நாளைய ஒளிமயமான வாழ்வுக்கான விதை. வியர்வை விதைகளை விருப்பத்தோடு விதையுங்கள்; நீங்கள் விரும்பும் மகிழ்வான வாழ்வு உங்களுடையதாகும்!

வியர்வை அழகானது; அது உழைப்பின் மாண்பை உலகுக்கு உணர்த்துகிறது. 
வியர்வைத் துளிகள் வைரமாய் ஒளிர்வது உழைப்பின் மேன்மையைப் பாருலகிற்குப் பறைசாற்றவே!

உழைப்பாளரின் வியர்வை அவர்களுடைய கண்ணீரின் வெளிப்பாடு.
இன்று நீ வியர்வை சிந்தினால், நாளை நீ இரத்தம் சிந்த வேண்டியிருக்காது!

வெற்றி என்பது ஒரு சதவீதம் அதிர்ஷ்டம்; தொண்ணூற்று ஒன்பது சதவீதம் வியர்வை. உங்கள் கனவுகளை வெற்றியாக்கும் மந்திரம் வியர்வைத் துளிகளே!

வியர்வையில் மூழ்கி உயிரை விட்டவர் எவரும் இல்லை. வியர்வை சிந்தாமல் உயர்வை எட்டியவர் எவரும் இல்லை!
வியர்வை உவர்ப்பானது இல்லை என்பது இனிப்பான கனிகளை அது தரும் போதுதான் புரிகிறது!

வாழ்க வளமுடன் நலமுடன்