வாழ்க்கை ஒரு சக்கரம் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 05.03.2024

வாழ்க்கை சக்கரத்தில் 
கடந்து விட்டவனுக்கு கப்பல் மாயையாக இருக்கலாம்
கடந்து கொண்டிருப்பவனுக்கு 
கப்பல் ஒரு நாளும் மாயை யாகாது.

முற்றும் துறந்ததாக முணுமுணுத்துக் கொண்டிருப்பவர்கள்
அந்த முணுமுணுப்பு கூட 
ஒரு நிறைவற்ற சலனத்தின் வெளிப்பாடு என்று எப்போது உணர்ந்து கொள்வார்களோ!

உள் சுற்றில் பயணிப்பவர்கள்.
வெளிசுற்றைப் பார்த்து ஏளனம் செய்கிறீர்கள் என்றால்?
உங்களுக்கான வெளிச்சுற்றை
முழுவதுமாக கடந்து விடவில்லை என்றே பொருள்.

ஒருவரின் ஆனந்தம் கண்டு எதிர்மறை விளம்புகிறீர்கள் என்றால்?
நீங்கள் இன்னும் மையம்  தொடவில்லை என்றே பொருள்.

மையம் தொட்டவனுக்கு புரியும்
ஞானம் என்பது அனைத்தையும் கடந்து வருவது என்பது
இக்கரையில் இருந்து அக்கரைக்கு
குதித்தவர்கள் யாரும் இல்லை.

எல்லோரும் நீந்தியோ
படகிலோ கப்பலிலோ ஏதோ ஒன்றின் துணை பற்றி கரையேறியவர்கள் தான்.                                                 
                                                                                                                                                                                            இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நம்பிக்கையும் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.

 

சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி