சவால்கள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 19.06.2024

ஆற்றில் குதிக்காத வரை நீச்சல் வராது! தயங்கிக் கொண்டே இருந்தீர்களானால் ஆற்றின் கரையிலேயே உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டியது தான்.
எனவே சந்தர்ப்பம் கிடைக்கும் போது புதிய சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.
இத்தகைய சவால்கள் தான் உங்களைத் திறமையிலும், அறிவிலும் மேலே இட்டுச் செல்லும்.
ஒரு முறை முயற்சி செய்தால்
அலட்சியம் செய்பவர்கள்.
ஒவ்வொருமுறையும் முயற்சி செய்து பார் அட லட்சியம் என்பார்.
வாழ்க்கையில் வெற்றிக்காக நிக்காம ஓடு. வெற்றியடைஞ்சா இன்னும் வேகமா ஓடு.
வானின் உயரத்தில் பிறக்கும் மழைத்துளி மண்ணில் வீழ்ந்து விட்டேன் என கலங்கவில்லை.
விழுந்த இடத்தில் இருந்து
எழுந்து ஓடுகிறது தனக்கென பாதை உருவாக்கி.
கருவாகவே பல கோடி அணுக்களில்
போராடி வந்தவன் நீ.
சிறு முயற்ச்சியோடு உன் எண்ணத்தில் தெளிவாக இருந்தால் வெற்றி நிச்சயம்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நம்பிக்கையும் அமைதியும் நிம்மதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் இறை இயேசுவே.
மரியே வாழ்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
