அன்பு ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 04.12.2024
இந்த கவிதைக்கு
சொல் தேவையில்லை
இதன் உணர்வுகளை
விழிகள் பேசும்
உலகத்தின் பொது மொழி
இது மட்டும் தான்
ஆசை அடங்குவது
இது ஒன்றுக்குத்தான்
உயிர்களோடு உறவாட
இதனால் தான் முடியும்
நீயும் நானும் நாமாக இணைய
இது வேண்டும்
வேற்றுமைகளை மறந்த
ஒற்றுமைக்கு இது தேவை
நம்பிக்கையே
இதன் வளர்ச்சி
கருணையே
இதன் முதலீடு
உண்மையே
இதன் பலம்
வெற்றியே
இதன் பரிசு
இதை கொடுத்து
எதையும் வாங்கலாம்
எதை கொடுத்தாலும்
இதை வாங்க முடியாது
இது கருவி
எதையும் உருவாக்கும்
இது ஆயுதம்
எதிரிகளையும் வெல்லும்
இதன் பாதையில்
மகிழ்ச்சி பயணிக்கும்
இதன் பயணத்தில்
வாழ்வு சிறக்கும்
அன்பு
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்.
இந்த நாள் இனிய நாளாகட்டும்
வாழ்க வளர்க
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி