புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட கோரிக்கை | Veritas Tamil

மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கனிவான கவனத்திற்கு, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோனி அவர்கள் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயேசு இறந்த தியாக நாளாம் புனித வெள்ளி அன்று தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடுவதற்கு சட்டமன்றத்தில் அரசின் கொள்கை முடிவில் தீர்மானம் எடுக்க வேண்டி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும் விசுவாசமான இயேசு இறந்த புனித வெள்ளி ஏப்ரல் 3 ஆம் தேதி நினைவுகூறப்பட. இருக்கிறது. அன்றைய நாட்களில் கிறிஸ்தவர்கள் இரத்ததானம் முகாம் நடத்துதல், மாநகரம் மற்றும் கிராம வீதிகளில் மக்கள் பெருமளவில் கூடி சிலுவைப் பாதை ஊர்வலம், அமைதிப்பவணிகள், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதல் என்று கிறிஸ்தவர்கள் சபைகள் கடந்து அனைத்து கிறிஸ்தவர்களும் அந்த நாளை ஒரு தியாக நாளாக கடைபிடித்து வருகிறார்கள். ஆகவே, அந்த நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு வேண்டி, ஏற்கனவே ஆளும் கட்சி,  எதிர்கட்சி, மற்றும்  அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களளை சந்தித்து மனு வழங்கி உள்ளோம். மேலும் 03.03.2022 ஆம் ஆண்டு இருந்த சிறுபான்மை நல ஆணையர் உயர் திரு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தொடங்கி தொடர்ந்து தற்போதைய சிறுபான்மை நல ஆணையர் அருட்தந்தை ஜோ அருன் வரை ஐந்தாவது ஆண்டாக தமிழ்நாடு அரசுக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மதுவிலக்கு இயக்கங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு தண்ணார்வ இயக்கங்கள் வழியாக அரசுக்கு பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறோம். 
ஆகவே, தமிழ்நாடு முதல்வர் அவர்களின்  கவனத்திற்கு கொண்டு சென்று, சட்டமன்றத்தில் இதை ஒரு சிறப்பு தீர்மானமாக நிறைவேற்றித் தருமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும், மக்கள் தங்களின் அனைத்து சமய கலாச்சார பண்பாட்டு விழாக்கள் சிறப்பாகவும் மாண்போடும் அமைதியோடும் நடைபெற அரசு முன்வந்து அந்தந்த சிறப்பு நாட்களை மண்போடு நடத்த மதுக்கடைகளை மூட வேண்டும்  என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பூரண மதுவிலக்கு இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு படிப்படியாக மதுக்கடைகளை குறைத்தல், குடி நோயாளருக்கான மறுவாழ்வு இல்லங்கள் அமைத்தல் மற்றும்  அரசு எடுக்கும் எல்லா முயற்சிகளையும் மனமுவந்து பாராட்டுகின்றோம்.

 ஆகவே, அருள்கூர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல்  அறிவிப்பானைக்கு முன்பாக  புனித வெள்ளி அன்று மது கடைகளை அடைக்க கோரி தீர்மானம் எடுத்து கொள்கை 
முடிவாக அறிவிக்க முதல்வர் அவர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு செல்லவும், சட்டமன்ற உறுப்பினராகிய தாங்கள் சட்டமன்றத்திலும் முதல்வர் அவர்களை நேரடியாக சந்தித்து பரிந்துரைத்து, பெற்றுத்தர வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.