நற்செய்தி சமரசத்தை அல்ல, உண்மைக்கு அழைக்கிறது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 15ஆம் வாரம் – திங்கள்
எசாயா  1: 11-17
மத்தேயு 10: 34- 11: 1

நற்செய்தி சமரசத்தை அல்ல, உண்மைக்கு அழைக்கிறது!

முதல் வாசகம்.

எசாயாவின் இறைவாக்கு நூலை மூன்று பிரிவுகாகப் பரிப்பர். இன்றைய
வாசகப் பகுதியனது இஸ்ரயேலர்கள் பாபலோனுக்கு அடிமைகளாகக்க்
கொண்டு செல்லப்படுவதற்கு முன் எருசலேம் பகுதியில் இறைவாக்கினர்
எசாயாவின் வழி, இறைவன் உரைத்த செய்தியை வாசிக்கிறோம்.
அவர்கள், கடவுளுக்கு உண்மையாய் இராமல், வெறும் பலிகளையும்
வெளிப்புற வழிபாடுகளையும் கடவுளுக்கு அளித்ததையொட்டி கடவுள்
எச்சரிக்கிறார். மனமாற்றமும் நீதியான வாழ்க்கையுமே அவருக்குப்
பிரியமானவை என்று எசாயா எடுத்துரைக்கிறார்.

மக்களின் பாவமுள்ள வாழ்க்கையுடன் இணைந்த வழிபாட்டை இறைவன்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அதற்குப் பதிலாக, தீமையை விட்டு விலகி,
நன்மை செய்யவும், நீதியை நாடவும், ஒடுக்கப்பட்டோருக்கு உதவவும்,
எழை எளியோருக்கும் கைம்மெண்களுக்கும் நீதி வழங்கவும்
அழைக்கிறார்.

நற்செய்தி.

இன்றைய நற்செய்தி பகுதியில், இயேசு தம் சீடரிடம், அவரைப்
பின்பற்றுவது எளிதான பாதை அல்ல என்பதை எடுத்துரைக்கிறார்.
அவரை ஏற்றுக்கொள்வதால் சில நேரங்களில் குடும்பத்தினரிடையே கூட
கருத்து வேறுபாடுகளும் எதிர்ப்புகளும் எழலாம் என்கிறார்

இருப்பினும், இயேசுவை எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு செய்து , தன்
சிலுவையை சுமந்து கொண்டு அவரைப் பின்பற்றுவோரே உண்மையான
சீடர்கள் என்று ‘சீடத்துவத்திற்கு' பொருள் கூறுகிறார். கிறிஸ்துவின்
சீடர்களை அன்போடு ஏற்றுக்கொண்டு உதவுகிறவர்கள்,
இறைவனிடமிருந்து தகுந்த கைம்மாறைப் பெறுவார்கள் என்றும் அவர்
உறுதியளிக்கிறார். இறுதியாக, இயேசு தம் பன்னிரு சீடர்களுக்கு
அறிவுரைகளை முடித்து, மக்களுக்குப் போதிக்கவும் நற்செய்தியை
அறிவிக்கவும் தொடர்ந்து பயணித்தார் என்கிறார் மத்தேயு.

சிந்தனைக்கு.

முதலில் இன்றைய நற்செய்தியை வாசிக்கும் போது, நம்மில் பலருக்குப்
புரியாத புதிராகத் தோன்றக்கூடும். உண்மையிலேயே இயேசு இப்படிச்
சொல்லியிருப்பாரா என்றும் கேட்கக்கூடும். இந்தப் பகுதியைப்
புரிந்துகொள்ள, கிறிஸ்துவின் திருப்பணியை ஆழமாகவும் தெளிவாகவும்
அறிந்திருக்க வேண்டும். அவர் எங்கும் எதற்கும் சண்டை மூட்டுபவர்
அல்ல.

முதலாவதாக, இந்த படிப்னையை பொதுமக்களுக்கல்ல; மாறாக,
பன்னிரு திருத்தூதர்களுக்கே இயேசு வழங்கினார் என்பதை கவனிக்க
வேண்டும். இன்றைய முதல் வாசகத்தில், இறைவன் வெறும் பலிகளையும்
வெளிப்புற வழிபாடுகளையும் விரும்பவில்லை என்று தெளிவாகக்
கூறுகிறார். மாறாக, தீமையை விட்டு விலகி, நன்மை செய்யவும், நீதியை
நிலைநாட்டவும், ஏழைகளையும் ஒடுக்கப்பட்டவர்களையும் காக்கவும்
அழைக்கிறார். உண்மையான இறைபக்தி, வாழ்வில் நீதியும் அன்பும்
வெளிப்படுவதில்தான் உள்ளது.

நற்செய்தியில், “நான் அமைதியை அல்ல, வாளைக் கொண்டுவர
வந்தேன்” என்று இயேசு கூறுகிறார். இதன் பொருள், அவர் சண்டையை
விரும்புகிறார் என்பதல்ல. மாறாக, உண்மைக்காக நிற்பது சில
நேரங்களில் எதிர்ப்பையும் பிரிவையும் ஏற்படுத்தும் என்பதை அவர்
உணர்த்துகிறார்.

ஆழந்தறிந்தால், "ஷலோம்" என்பது எபிரேய மொழியில் "அமைதி" என்று
பொருள்படும். ஆனால் அது வெறும் சண்டை, சச்சரவு இல்லாத
நிலையைக் குறிப்பதல்ல. மாறாக, இறைவனுடனான சரியான
உறவிலிருந்து பிறக்கும் முழுமையான ஒற்றுமை, நீதி, நல்வாழ்வு மற்றும்
இறையாசீர்வாதத்தின் நிறைவை அது குறிக்கிறது. உண்மையிலும்
இறைவனோடு ஒன்றிப்பிலும் வேரூன்றிய அமைதியே ஷலோம் ஆகும்.
இத்தகைய இறை உறவோடுக்கூடிய அமைதி நம் உள்ளத்தில்
பெருக்கெடுக்க வேண்டும்.

இன்று நமது வாழ்வில் நாம் அனுதினமும் நாடும் அமைதி எத்தகையது
என்பதை சிந்திக்க வேண்டும். உண்மையை விட தற்காலிக
சுகபோகங்களுக்கு முன்னுரிமை கொடுத்து சமரசம் செய்கிறோம்
என்பதை மறுப்பதற்கில்லை. வளர்ச்சிக்கும் நல்லிணக்கத்திற்கும்
வழிவகுக்கும் ஆன்மீகப் போராட்டங்களை நாம் கைவிடுகிறோம்.

இறைவேண்டல்

ஆண்டவரே, உமது உண்மையின் வழியில் தைரியமாக நடக்க எனக்கு
அருள் தாரும். உலகத்தின் வசதியையும் பயத்தையும் விட, உம்மை
முதன்மையாகத் தேர்ந்தெடுக்கும் மனதை அளித்தருள்வீராக. ஆமென்

ஆர். கே. சாமி (மலேசியா).
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image