வெளிப்புற சமய்ச் சடங்குகள் அல்ல, உள்ளத்தின் மாற்றம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 13ஆம் வாரம் – சனி
 
ஆமோஸ் 9: 11-15
மத்தேயு 9: 14-17
 
வெளிப்புற சமய்ச் சடங்குகள் அல்ல, , உள்ளத்தின் மாற்றம்!

முதல் வாசகம்.

இவ்வாசகப்பகுதியில்,  கடவுள் தமது மக்களுக்கு அவர்களுக்கான நம்பிக்கையையும் மீட்பையும் வாக்குறுதி அளிக்கிறார். தாவீதின் வீழ்ந்த கூடாரத்தை மீண்டும் எழுப்பி, அதை முன்பைப் போல நிலைநிறுத்துவார் என்று கூறுகிறார். சிதறிப்போன இஸ்ரயேல் மக்களை அவர்களுடைய நாட்டிற்கு மீண்டும் கொண்டுவந்து, அவர்கள் நகரங்களை மீண்டும் கட்டி, திராட்சைத்தோட்டங்களையும் அத்தோட்டங்களின்  பலனை அனுபவிப்பார்கள்.

மேலும்,  நாடும் வளமுடன் ஆசீர்வதிக்கப்படும்; அறுவடை தொடர்ந்து நிறைந்திருக்கும். இறுதியாக, கடவுள் அவர்களை அவர்கள் அடைந்த நாட்டில் உறுதியாக வாழச் செய்வார் என்றும் இனி அவர்கள் அங்கிருந்து விரட்டப்படமாட்டராக்ள்  என்ற செய்தியை இறைவாக்கினர் ஆமோஸ் வட நாட்டினருக்கு பகிர்கிறார்.

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவானின்  சீடர்கள், "உங்கள் சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை ?" என்று இயேசுவிடம் கேட்டபோது, இயேசு அவர்களிடம்,  மணமகன் அவர்களோடு இருக்கும்போது திருமண விருந்தினர்கள் துக்கப்பட முடியாது அல்லவா ? என்று உவமையோடு  விளக்குகிறார். ஆனால், மணமகன் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும் நாள்கள் வரும்; அப்போது அவர்கள் நோன்பு இருப்பர்கள்  என்று கூறுகிறார்.
பின்னர், இயேசு இரண்டு உவமைகளைச் சொல்கிறார்:
•    பழைய ஆடையில் புதிய துணியைத் தைக்க முடியாது, ஏனெனில் அது மேலும் கிழிவை உண்டாக்கும். 
•    புதிய திராட்சரசத்தை பழைய தோற்பைகளில் ஊற்ற முடியாது, ஏனெனில்,  தோற்பைகள் கிழிந்து, திராட்சரசமும் வீணாகும். புதிய திராட்சரசம் புதிய தோற்பைகளில்தான் வைக்கப்பட வேண்டும் என்று முடிக்கிறார்.

சிந்தனைக்கு.

முதல் வாசகத்தில், வடநாட்டு இஸ்ரயேல் மக்கள் தென்னாடான யேதேயாவில் இருந்து பிரிந்து, எருசலேம் ஆலத்திற்குப் பதிலாக அன்னிய நெய்வங்களுக்கு ஆலயங்கள் எழுப்பி, வழிமாறி பாவத்தில் வாழ்ந்தனர். இக்காலத்தில்தான் அங்கே ஆமோஸ் இறைவாக்குரைத்தார். இவரது இறைவாக்கில் இன்று, கடவுள் வல்லவராகவும்   நீதியுள்ளவராக இருப்பவர் என்றும்,  மனந்திரும்புகிற தமது மக்களை மீட்டெடுத்து, அவர்களை ஆசீர்வதித்து, நிலையான அமைதியையும் வளமும் அளிப்பவர் என்ற செய்தியை முன்வைக்கிறார். 
இந்தப் பகுதியில், கடவுளின் அருளையும்,   மீட்பு மற்றும் உடன்படிக்கைக்கான உண்மைத்தன்மையையும்  வலியுறுத்தி போதிக்காறார் ஆமோஸ். ஆம், நம் கடவுள் இரக்கச் சிந்தை உடையவர் என்பதை ஆமோஸ் தெளிவுப்படுத்துகிறார். பாவங்கள் எவ்வளவு பெரிது என்பதல்ல, மனமாற மனதுண்டா என்பதே கேள்வி. 

நற்செய்தியில், இரு உவமைகளைக் கொண்டு இயேசு போதிக்கிறார். முதலாவதாக, 1. மணவாளன் உவமை  
 
 மணவாளன் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் வரும்; அப்போது அவர்கள் நோன்பிருப்பார்கள் என்று பதிலளிக்கிறார் இயேசு.
 இங்கே மணவாளன் என்பது இயேசுவையே குறிக்கிறது. 
•    திருமண விழா என்பது மகிழ்ச்சியின் காலம். மணவாளன் அருகில் இருக்கும்போது துக்கம் அனுசரிப்பது பொருத்தமல்ல. 
•    அதுபோல, இயேசு தம்முடைய சீடர்களுடன் இருந்த காலம் மகிழ்ச்சியின் காலம். 
•    ஆனால் அவர் சிலுவையில் அறையப்பட்டு, அவர்களிடமிருந்து பிரியும்போது, அவர்கள் துக்கத்திலும் இறைவேண்டலிலும்  நோன்பிலும் இருப்பார்கள் என்ற செய்தியை இந்த உவமையின் விழி இயேசு எடுத்துரைக்கிறார்.
ஆம், இன்று நாம் கடைப்பிடிக்கும் நோன்பு என்பது வெறும் சமயச் சடங்கு அல்ல; அது கடவுளுடனான உறவின் வெளிப்பாடு என்ற படிப்பினையை இயேசு வெளிப்படுத்துகிறார். அடுத்து, வரும் இரண்டாது உவமையான ‘புதிய துணியும் பழைய ஆடையும்’ என்பதில், மக்கள் நன்கு அறிந்திருந்த செயலில் இருந்து விளக்குகிறார் இயேசு. 
1. புதிய துணி துவைக்கும் போது சுருங்கும். அதை பழைய ஆடையில் ஒட்டுப்போட தைத்தால்  பின்னர் அது இழுத்து பெரிய கிழிவை உண்டாக்கும் அல்லவா? ஆம், இயேசு கொண்டுவந்த புதிய உடன்படிக்கையின் வாழ்க்கையை, பழைய மதச் சடங்குகளுக்குள் வெறுமனே சேர்க்க முடியாது. புதிய வாழ்க்கை முறைக்கு புதிய மனம் தேவை என்ற படிப்பினைய தருகிறார் ஆண்டவர். அவ்வாறே, புதிய திராட்சரசத்தால் பழைய தோற்பைகளும் கெடும்.  17)
இங்கே, ஆண்டவர் இந்த இரு உவமைகள் வாயிலாக  புதிய திராட்சரசம் – இயேசுவின் புதிய போதனை, மற்றும் புதிய உடன்படிக்கை, நிகழவிருக்கும் தூய ஆவியாரின்  புதிய செயல்பாடு ஆகியவற்றை முன்குறித்து இயேசு பேசுகிறார்.

ஆம் நம்மிலுள்ள இந்த கிறிஸ்தவ வாழ்வானது வெளிப்புற சடங்குகளை விட, உள்ளத்தின் மாற்றத்தை முக்கியமாகக் கொண்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நான் கடவுளை வெறும் பழக்க வழக்கங்களால் ஆராதிக்கிறோமா? அல்லது உண்மையான உறவுடன் அவரைத் தேடுகிறோமா என்பதை உணர வேண்டும். 
 
இறைவேண்டல்.

என் ஆண்டவராகிய இயேசுவே, நீர் தரும் புதிய வாழ்வையும் ஆசீர்வாதங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனதை எனக்கு அருள்வாராக. ஆமென். 
 

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image