தூய ஆவியார் பெருவிழா | Veritas Tamil
தூய ஆவியானவர் மூவொரு கடவுளின் மூன்றாவது நபர் ஆவார்.
திருநாளின் பெயர்:
• பெந்தெக்கோஸ்து பெருவிழா
• தூய ஆவியார்; பெருவிழா
• திருச்சபையின் பிறந்த நாள்
இப்பெருவிழாவானது பாஸ்கா காலத்தின் இறுதி நாள் அதாவது பாஸ்கா காலத்தின் 7ஆம் வாரம் சனிக்கிழமை மாலை 6.00 Pm மணியளவிலிருந்து துவங்குகிறகு.
தூய ஆவியின் சின்னங்கள்:
• புறா – அமைதி, தூய்மை, தெய்வீக பிரசன்னம்
• தீ – தூய்மை. மாற்றம் மற்றும் ஆற்றல்
• காற்று – காணமுடியாத சக்தி
• மொழிகள் – நற்செய்தி அறிவிக்கும் வல்லமை மற்றும் பல மொழிகளில் பேசும் ஆற்றல்
தூய ஆவியானவரின் நிறம்:
சிவப்பு - தீமையை சுட்டெரிக்கும் ஆற்றல், முடங்கி கிடந்த சீடர்களுக்கு வலிமையை அளித்தவர்.
தூய ஆவியாரின் பணி
1. வழிகாட்டல் மற்றும் போதனை
தூய ஆவியானவர் கடவுளின் உண்மையை புரிந்து கொள்ள உதவுகிறார்.
2. பாவ உணர்வு
அவர் மனிதர்களின் தவறுகளை உணர செய்து கடவுளின் பக்கம் திரும்ப உதவுகிறார்.
3. விசுவாசிகளை வலுப்படுத்துதல்
தூய ஆவியானவர் ஆவிக்குரிய வரங்களை வழங்குகிறார்.
4. ஆறுதல் மற்றும் உற்சாகம்
துயரத்தின் நேரங்களில் அமைதி மற்றும் உறுதுணை அளிக்கிறார்.
5. ஜெபத்தில் துணைபுரிதல்
நம்மோடு இணைந்து செபிப்பவர்
6. வாழ்க்கையை மாற்றுதல்
நம்மை தமது கனிகளாலும் கொடைகளினாலும் நிரப்பி கிறிஸ்துவைப் போன்றவராக மாற்றுகிறார்.
எழுத்து
அருட்சகோதரி ஜோஸ்பின் பிரைடா SSAM