அம்மாவைத் தெய்வம் என்று சும்மாவா சொன்னார்கள் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
உலகில் முன்பில்லாத புதிய புதிய நோய்களின் வரத்து அதிகமாயிற்று. சில நோய்களுக்கு மருத்துவர்களால்கூட இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சில குழந்தைகள் தூங்கினால் இறந்துவிடும். எனவே, இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் தூங்கவிடாமல் பாதுகாக்கின்றனர். சில குழந்தைகளின் தோல் கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லாக மாறிவிடுகின்ற நோய். இப்படிப் பெயர் தெரியாத பல நோய்கள் உருவெடுத்து விட்டன. இப்படிப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்கின்ற பெற்றோரின் தியாகங்களுக்கு அளவே இல்லை.
சீனாவில் வசிக்கும் வாங் டியான்ஃபாங் என்பவருக்கு முப்பது வயதாகி விட்டது. ஆனாலும் இன்றும் நான்கு வயது குழந்தையைப் போன்று தோற்றமளிக்கிறார். இவரால் பேச முடியாது. அதிக நேரம் எழுந்து நிற்க முடியாது. 24 மணிநேரமும் இவரை இவரது தாய் கவனித்துக் கொள்கிறார்.
"இரண்டு வயதிலேயே என் மகனின் மூளை வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் நின்றுவிட்டது. ஏராளமான மருத்துவர்களைப் பார்த்தும் இன்றும் இதற்கானப் பிரச்சனை என்ன, இதைக் குணப்படுத்துவதற்கான மருத்துவம் என்ன எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. மூன்று வயதிலேயே இவனுக்காக நான் படும் துன்பத்தைக் கண்ட என் உறவினர்கள், இவனைப் புத்தர் ஆலயத்தில் விட்டுவிடும்படி வற்புறுத்தினார்கள். இன்னோர் ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றுக்கொள்ள வற்புறுத்தினார்கள். அவர்கள் சொன்னதை நான் மறுத்துவிட்டேன். எப்படியும் இவனது நோயைக் குணமாக்க முடியாது என்று எனக்குத் தெரியும். இன்னும் எத்தனை காலம் அவன் உயிரோடிருப்பான் என்று தெரியாது. எனவே, நான் இருக்கும்வரை அவனை நான் பார்த்துக்கொள்வேன்" என்கிறார் இவரது தாய் சு ஸியாவோபிங்.
ஒரு தேயிலைத் தோட்டத்திலும், ஒரு வீட்டிலும் வேலை பார்க்கின்ற கூ.ஸியாவோபிங் வறுமையிலும் தன் மகனைக் கரிசனையோடு பாதுகாத்து சொன்னார்கDேகாகத்தான் அம்மாவைத் தெய்வம் என்று வருகிறார்.
தாய் என்னும் தெய்வம் உள்ளவரை ஆலயம் என்னும் வீட்டில் ஆனந்தம் என்றும் நிலைத்து நிற்கும்.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
