பேருதவி செய்பவர்களாக | அருட்பணி. ஜெ. ஞானசேகரன் | Veritas Tamil

பிரசவ வலி

கைம்மாறு கருதாது உதவி செய்பவர்கள் பலனை எதிர்பார்ப்பதுமில்லை; ஆரவாரம் செய்வதுமில்லை.

கர்நாடக மாநிலம் மான்வி பகுதியைச் சேர்ந்த முப்பது வயது நிரம்பிய எல்லம்மாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் அவர் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்."

தன் கணவர் ராமண்ணாவுடன் ராய்ச்சூரில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்குச் சிசிச்சைக்காகச் சென்றுவிட்டு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பேருந்தைவிட்டு இறங்கியதும் திடீரென்று எல்லம்மாவுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது.

எல்லம்மா வலி தாங்க முடியாமல் சாலையில் விழுந்து அலறி துடித்துக் கொண்டிருந்தார். திடீரென்று அங்கு வந்த அறுபது வயது மதிக்கத்தக்க பிச்சை எடுக்கும் பெண்மணி ஒருவர் எல்லம்மாவுக்குப் பிரவசம் பார்க்கத் தொடங்கினார். வேறு சில பெண்களும் உதவிக்காகக் கூடி வந்தனர். எல்லம்மா நினைத்தபடியே அவருக்குப் பெண் குழந்தையும் பிறந்தது.

 

பிரசவம் பார்த்த அந்தப் பிச்சை எடுக்கும் பெண்மணி மீண்டும் பிச்சை எடுக்கச் சென்று விட்டார். அப்பெண்ணுக்கு நன்றி சொல்வதற்காகக் குழந்தையின் தந்தை ராமண்ணா அவரைத் தேடியபோது அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சில நேரங்களில் நாம் துச்சமாகக் கருதுபவர்கள்கூட ஏதேனும் ஒரு வகையில் நமக்குப் பேருதவி செய்பவர்களாக இருப்பார்கள்.

Tamil Survey Popup Image