பாசமுள்ள மாமியார் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

அன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணவரிடம், "என்னங்க. நான் உங்க வீட்டு முதல் வாரிசை சுமக்கிறேன். ஆனா, அதை உங்க அம்மா உணர்ந்த மாதிரி தெரியலையே? என்னை ஒரு வேலைக்காரியா நினைச்சு வேலை வாங்கிட்டு இருக்காங்க. என்னால முடியலைங்க. நீங்களாவது உங்க அம்மாகிட்ட என் நிலைமையைப் பத்தி பேசக்கூடாதா?" என்று சொன்னார் கலா.

மனைவி சொல்வதைக் கேட்டுக் கொதித்துப் போன கணவர், "கவலைப்படாதே, நிச்சயம் அம்மாவிடம் இதுபற்றிக் கேட்பேன்" என்று ஆறுதல் கூறினார். அந்த நேரத்தில், பக்கத்து வீட்டு கமலா அக்காவிடம் மாமியார் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டாள் கலா.

"கடவுள் புண்ணியத்துல... என் மருமகள் கலாவுக்குச் சுகப்பிரசவம் நடந்தா, வேளாங்கண்ணிக்கு நான் நடைப்பயணமா வர்றதா வேண்டிக்கிட்டு இருக்கேன். அவளுக்குச் சுகப்பிரசவம் நடக்கணும்னு நான் எந்த வேலையையும் செய்யாம அவளையே எல்லா வேலையையும் செய்யச் சொல்றேன். நல்லா வேலை செஞ்சாதானே சுகப்பிரசவம் நடக்கும்? நல்லபடியா அவளுக்குச் சுகப்பிரசவம் ஆயிட்டா அதுக்கு அப்புறம் என் மருமகளை ஒரு வேலையும் செய்யவிடாம, என் உள்ளங்கையில் வைச்சு தாங்குவேன். இப்ப அவளை நான் இப்படி வேலை வாங்கறேன்னு அவளுக்கு என் மேல கண்டிப்பா கோபம் இருக்கும். இருந்துட்டு போகட்டும். நல்லது நடந்தா சரி!" என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அதை ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்த கலாவின் கண்கள் குளமாயின!

கருவறையில் இருந்த உணர்வை
உன் மடியில் உணருகிறேன் அம்மா.

"தாய் என்ற சொல்லிற்கு அண்ணன்றேவி, அரசன்றேவி, ஊட்டுந்தாய், குருவிறேவி, கைத்தாய், செவிலித்தாய், தன்றேவயையின்றாள், நற்றாய், பாராட்டுந்தாய். மாதாவின் சகோதரி,முதல் முதற்றாம் முதன்மை."


எழுத்து 
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.

Tamil Survey Popup Image