அன்பும் தியாகமுமே குடும்ப அழகு | அருள்பணி. ம. டைட்டஸ் மோகன் | Veritas Tamil
அன்பும் தியாகமுமே குடும்ப அழகு
அழகே அழகே எதுவும் அழகே, அன்பின் விழியில் எல்லாம் அழகே...என்கிற ‘சைவம்’ தமிழ்த் திரைப்படப் பாடலில் அழகின் ஒட்டுமொத்த அர்த்தமும் அடங்கியுள்ளது. இயற்கையாய் கிடைத்த அத்தனை வளங்களும் வரங்களும் அழகே! எல்லாம் ஒன்றுபோல் இருப்பதல்ல; மாறாக, வேறுபடுவதுதான் மனிதனின் உயிரியல் சார்ந்த உண்மையான அழகு. இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்வதாயின், ஒருவருடைய உண்மையான அழகு அவருடைய தோற்றத்தில் அல்ல, நடத்தையில்தான் வெளிப்படுகிறது. சுயநலமின்றி மற்றவருக்காகக் கவலைப்படுவதும், தியாகம் மேற்கொள்வதுமாய் இத்தகு அழகு குடும்பங்களில் மிளிர வேண்டும்.
குடும்பங்களில் மகிழ்வும் அழகும் குறித்து பேசுகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது ஊக்கவுரை (எண்127) பின்வரும் அழகு வாழ்வியலை முன்மொழிகிறது: அழகு என்பது உடல் சார்ந்த அல்லது மனம் சார்ந்த கவர்ச்சியில் இருந்து வேறுபட்டது. அது உடைமையாக்கும் அவசியத்தை உணராது. அது அடுத்தவருடைய புனிதத்தைப் போற்றச் செய்கிறது. நுகர்வுக் கலாச்சாரச் சமூகத்தில் அழகுணர்வு குன்றிவிட்டதால் மகிழ்வு மங்கிப் போகிறது. மனிதர்கள் உட்பட எல்லாமே வாங்கப்படவும், உடைமையாக்கப்படவும், நுகரப்படவுமே இருப்பதாக எண்ணப்படுகிறது. ஆனால் மென்மை பண்பு என்பது உரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்திலிருந்து விடுபட்ட அன்பின் அடையாளமாக இருக்கிறது. இது நாம் ஓர் ஆளை மிகுந்த மரியாதையோடு அணுகவும், ஒருவேளை நாம் அவர்களுக்கு ஏதாவது தீங்கிழைத்து விடுவோமோ என்கிற ஒரு வகை அச்சத்தோடு
அவர்களை நெருங்கவும் செய்கிறது. அடுத்தவரை அன்பு செய்வது என்பது அவர்களது இயல்பான அழகையும் புனிதத்தையும் ஆழமாகச் சிந்தித்துப் போற்றுகின்ற மகிழ்வைக் கொண்டதாகும். இந்த அழகும் புனிதமும் என்னுடைய தேவைகளை விட உயர்ந்தவை. இது அடுத்தவர் எனக்கு உரியவராக ஆக முடியாத போதும், உடல்ரீதியாக கவரக்கூடியவராக இல்லாதபோதும் நான் அவர்களது நலனை நாடச் செய்கிறது...
அழகு குறித்த நமது பார்வை குடும்பங்களிலிருந்தே மாறத் தொடங்கவேண்டும். குழந்தைகளிடம் “நீ கருப்பாக இருக்கிறாய்", "அவள் வெள்ளையாக இருக்கிறாள்" என்று நிறத்தின் அடிப்படையில் ஒப்பிடுவதை நிறுத்தி, அவர்களுடைய திறமை, நற்குணம், உழைப்பு, கருணை, தன்னம்பிக்கை ஆகியவற்றைப் பாராட்டுவோம். திருமணப் பேச்சுகளிலும் தோற்றத்தை முன்னிறுத்தி ஒருவரை நிராகரிப்பதைவிட, குணநலம், பரஸ்பர மரியாதை, பொறுப்புணர்வு, வாழ்க்கை நோக்கு ஆகியவற்றிற்கு மறையலாம்; உடல் வலிமையும் குறையலாம். ஆனால், அன்புடன் பிடித்த கை முக்கியத்துவம் கொடுப்போம். ஒருநாள் முகத்தின் பொலிவு மாறலாம்; துன்பத்தில் தாங்கிய தோள், விட்டுக்கொடுத்த மனம், இறுதிவரை உடன் நடந்த அழகைத் தேடவும் அதைவிட முக்கியமாக அத்தகைய அழகுள்ள மனிதர்களாக நாமே நம்பிக்கை இவையே குடும்ப வாழ்வில் நிலைத்திருக்கும் பேரழகு. அத்தகைய மாறவும் முயல்வோம்.
“அழகு என்பது நிலைக்கண்ணாடியில் பிரதிபலிப்பதல்ல.
மற்றவர்களுக்காக தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்ளும் மனிதர்கள்தான் இதுவரை மனித சமூகம் கண்ட பேரழகு மனிதர்கள்.
நீங்கள் அழகுள்ளவரா என்பதை அறிந்து கொள்ள உங்கள் உருவத்தைக் குடும்பச் சமூகக் கண்ணாடியில் பார்ப்பதற்கு முயலுங்கள்.
நம் உண்மை அழகைத் தெரிந்து கொள்வதற்கு இதுதான் சிறந்த வழி”
